Published : 28 May 2021 06:40 AM
Last Updated : 28 May 2021 06:40 AM

கருப்புப் பூஞ்சை தாக்குதலுக்கான மருந்து; இந்தியாவுக்கு 10 லட்சம் குப்பிகளை அனுப்புகிறது அமெரிக்க மருந்து நிறுவனம்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் ‘2டிஜி’ கரோனா எதிர்ப்பு மருந்தின் முதல் விநியோகத்தை நேற்று காணொலி வாயிலாக தொடங்கினார்.படம்: பிடிஐ

புதுடெல்லி

கருப்புப் பூஞ்சை தாக்குதலை குணப்படுத்துவதற்கான மருந் துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்க நிறுவனம் ஒன்று இந்தியாவுக்கு 10 லட்சம் மருந்துக் குப்பிகளை அனுப்ப உள்ளதாக மத்திய அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் 2-ம் அலை பெரிய அளவில் பாதிப் புகளை ஏற்படுத்தியுள்ளது. தொற்று பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து கருப்புப் பூஞ்சை தாக்குதல் பெரும் அச்சுறுத் தலை ஏற்படுத்தியுள்ளது. பல மாநி லங்களில் கருப்புப் பூஞ்சை நோய்த் தாக்குதல் அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கரோனா தொற்றுக்கு உள்ளான நபர்களில் 8 ஆயிரத்துக்கு மேலான நபர்களுக்கு கருப்புப் பூஞ்சை தாக்குதல் ஏற்பட்டுள்ளது. கரோனா தொற்றுக்கு அளிக்கப் படும் ஸ்டீராய்டு மருந்துகளால் இந்த பாதிப்பு வருவதாக கூறப் படுகிறது.

அதே நேரத்தில் இந்நோயை குணப்படுத்துவதற்கான மருந் துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உலகின் எந்த மூலையில் இருந்தாவது கருப்புப் பூஞ்சை தாக்குதலுக்கான மருந் தைக் கொண்டு வாருங்கள் என்று அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார்.

தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த கிலியட் (Gilead) என்ற மருந்து நிறுவனம், கருப்புப் பூஞ்சைத் தாக்குதலுக்கு பயன் படுத்தப்படும் ஆம்போடெரிசின் -பி என்ற மருந்தை இந்தியாவுக்கு அனுப்பிவருகிறது. அந்நிறுவனம் இதுவரை 1 லட்சத்து 21 ஆயி ரம் மருந்துக் குப்பிகளை இந்தியா வுக்கு அனுப்பியுள்ளது. மேலும், 85 ஆயிரம் குப்பிகள் ஓரிரு நாட்களில் இந்தியாவை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிலையில், கிலியட் நிறுவனம் ஒட்டுமொத்தமாக, இந்தியாவுக்கு 10 லட்சம் மருந்துக் குப்பி களை அனுப்பும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஆம்போ டெரிசின்–பி மருந்துக்கான தட்டுப்பாட்டை சமாளிக்க, அம் மருந்தை உள்நாட்டில் தயாரிக்க 5 நிறுவனங்களுக்கு மத்திய அரசு உரிமம் வழங்கியுள்ளது.

கரோனா எதிர்ப்பு மருந்து ‘2டிஜி' பயன்பாட்டுக்கு வந்தது

புதுடெல்லி: டிஆர்டிஓ தயாரித்துள்ள ‘2டிஜி’ கரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ) மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபாரேட்டரீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள '2-டியாக்சி-டி-குளுக்கோஸ்' என்ற கரோனா எதிர்ப்பு மருந்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கடந்த 17-ம் தேதி டெல்லியில் அறிமுகம் செய்தனர்.

சுருக்கமாக '2டிஜி' என அழைக்கப்படும் இந்த மருந்து, குளுக்கோஸை அடிப்படையாகக் கொண்டது. கரோனா நோயாளிகள் காலை, மாலை நேரங்களில் இந்த மருந்தை தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். தொடர்ந்து 5 முதல் 7 நாட்கள் வரை குடித்து வந்தால் நோயாளியின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அவர் விரைவில் குணம் அடைவார். நோயாளிகள் ஆக்சிஜனை சார்ந்திருப்பதற்கான தேவை குறையும் என்று டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதல்கட்டமாக 10 ஆயிரம் பாக்கெட் 2டிஜி கரோனா எதிர்ப்பு மருந்து நேற்று பல்வேறு மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி வாயிலாக கூறியதாவது:

கரோனா தடுப்புப் பணியில் டிஆர்டிஓ அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகிறது. நாடு முழுவதும் கரோனா மருத்துவமனைகளை அமைத்துள்ளது. டெல்லி, லக்னோ, வாரணாசி உள்ளிட்ட நகரங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை ஏற்படுத்தியுள்ளது.

டிஆர்டிஓ, டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள 2டிஜி கரோனா எதிர்ப்பு மருந்தின் முதல் விநியோகம் தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக 10 ஆயிரம் பாக்கெட்கள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

டிஆர்டிஓ தலைவர் சதீஷ் ரெட்டி கூறும்போது, ‘‘முதல்கட்டமாக எய்ம்ஸ் மருத்துவமனைகள், ராணுவ மருத்துவமனைகள், டிஆர்டிஓ மருத்துவமனைகளுக்கு 2டிஜி மருந்தை வழங்கியுள்ளோம். வரும் ஜூன் மாதத்தில் மற்ற மருத்துவமனைகளிலும் இந்த மருந்து கிடைக்கும்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x