

அசாமில் கர்பி மக்கள் விடுதலைப் புலிகளுக்கு காவல்துறையினருக்கும் நேற்று நடந்த மோதலில் பிரிவினைவாதிகளால், அம்மாநில காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் அவரது பாதுகாவலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் அங்கு சட்டம் ஒழுங்கு குறித்து உள்துறை கிரண் ரிஜ்ஜூ இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
அசாம் மாநிலம் கர்பி மக்கள் விடுதலைப் புலிகள் மீதான என்கவுன்டரின்போது, அசாம் காவல்துறை கண்காணிப்பாளர் நித்யானந்த கோஸ்வாமி மற்றும் அவருடன் இருந்த பாதுகாப்பு அதிகாரி கொல்லப்பட்டனர்.
இதனை அடு த்து, சம்பவ இடத்துக்கு சென்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜூ ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் கொல்லப்பட்ட எஸ்பியின் இறுதிச்சடங்கிலும் ரிஜ்ஜூ கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.