குழந்தைகளுக்கு தடுப்பூசி தேவை; பைஸர் மருந்தை விரைவாகக் கொள்முதல் செய்யுங்கள்; முதல்வர் கேஜ்ரிவால் வலியுறுத்தல்

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் | கோப்புப்படம்
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் | கோப்புப்படம்
Updated on
1 min read

அமெரிக்காவின் பைஸர் தடுப்பூசியை விரைவாக மத்திய அரசு கொள்முதல் செய்து குழந்தைகளுக்கு செலுத்த வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து மத்திய அரசுடன் பைஸர் நிறுவனம் தீவிரமாகப் பேச்சு நடத்தி வருகிறது. இந்தியாவுக்கு 5 கோடி டோஸ் தடுப்பூசிகளை சில நிபந்தனைகளுடன் ஜூலை முதல் அக்டோபர் மாதத்துக்குள் வழங்கத் தயாராக இருப்பதாக பைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசிகளை 12 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் செலுத்தலாம் எனத் தெரிவித்துள்ளது

இந்தியாவில் உள்ள உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் பைஸர் தடுப்பூசி 2 டிகிரி முதல் 8 டிகிரி வரை செல்சியஸில் ஒருமாதம் வரை வைத்து பயன்படுத்தலாம்” எனத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் இங்கிலாந்து சுகாதாரத்துறை வெளியிட்ட ஆய்வு ஒன்றில், உருமாற்றம் அடைந்த பி.1.617.2 வைரஸுக்கு எதிராக பைஸர் தடுப்பூசி 87 சதவீதம் வீரியமாகச் செயல்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.

இந்த சூழலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ பைஸர் நிறுவனத்தின் தடுப்பூசியை விரைவாகக் கொள்முதல் செய்ய வேண்டும். நமது குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசியை விரைந்து செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

3-வது அலை வருவதற்குமுன் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும், அதற்குள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என்று கேஜ்ரிவால் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

12ம் வகுப்பு தேர்வு குறித்து சமீபத்தில் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் தெரிவித்து கருத்தில், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி செலுத்தியபின்புதான் தேர்வுகளை நடத்த வேண்டும் எனத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in