Published : 27 May 2021 03:10 AM
Last Updated : 27 May 2021 03:10 AM

போராட்டம் தொடங்கி 6 மாதங்கள் நிறைவு- புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கருப்பு தினம் அனுசரிப்பு

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து 6 மாதங்களாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் நேற்று கருப்பு தினமாக அனுசரித்தனர்.

வேளாண் துறை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசியப் பொருட் கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களும் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவை களிலும் நிறைவேற்றப்பட்டன. இந்த 3 சட்டங்களும் குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் கடந்த செப்டம்பரில் அமலுக்கு வந்தன.

புதிய வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து டெல்லி யின் எல்லைப் பகுதிகளில் விவ சாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். விவசாய சங்கப் பிரதிநிதிகளு டன் மத்திய அரசு நடத்திய 11 சுற்று பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. சட்டத்தில் சில திருத்தங்கள் செய்ய மத்திய அரசு முன்வந்தது. ஆனால், 3 சட்டங்களையும் மொத்தமாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, விவசாய அமைப்பு கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

12 கட்சிகள் ஆதரவு

விவசாயிகள் போராட்டம் தொடங்கி நேற்றுடன் 6 மாதங் கள் நிறைவடைந்தன. இதை யடுத்து, நேற்று கருப்பு தினமாக விவசாயிகள் அனுசரித்தனர். விவ சாயிகளின் கருப்பு தின போராட் டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட 12 கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் பல கிராமங்களிலும் டெல்லி எல்லை களிலும் விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பஞ்சாபில் லூதி யானா மாவட்டத்தில் பெண்கள் தலைமையில் நடந்த ஆர்ப் பாட்டத்தில் ‘போராடுவோம், வெற்றி பெறுவோம்’’ என்று கோஷமிட்டனர்.

சம்யுக்த் கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் கூறும்போது, ‘‘பலத்தை காட்ட வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. கரோனா விதிமுறைகள் அமலில் இருப்பதால் அதற்கு உட்பட்டு வேளாண் சட்டங்களுக்கு எதிராக அடையாளபூர்வமாக எங்கள் எதிர்ப்பை தெரிவித்து போராடு கிறோம். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணத் தயாராக உள்ளோம். சாத்தியமான வழிமுறைகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

பஞ்சாபில் சிரோமணி அகாலி தளக் கட்சியின் தலைவர் சுக்பிர் சிங் பாதல் தனது வீட்டில் கருப்புக் கொடி ஏற்றினார். ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், ‘வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எனது வீட்டில் கருப்புக் கொடி ஏற்றினேன். எங்கள் கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x