Published : 27 May 2021 03:10 am

Updated : 27 May 2021 05:40 am

 

Published : 27 May 2021 03:10 AM
Last Updated : 27 May 2021 05:40 AM

கர்நாடகாவை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் எச்.எஸ்.துரைசுவாமி காலமானார்

hs-duraiswamy-passed-away
எச்.எஸ்.துரைசுவாமி

பெங்களூரு

கர்நாடக மாநிலம் மைசூரு அருகேயுள்ள ஹாரோஹள்ளி கிராமத்தில் 1918 ஏப்ரல் 10-ம் தேதி எச்.எஸ்.துரைசுவாமி பிறந்தார். இளம்வயதில் காந்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அவர், 1943-ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்று 14 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்தார். சாகித்ய மந்திரா என்ற பதிப்பகத்தை தொடங்கி தேசப்பற்றை ஊட்டும் நூல்களை வெளியிட்டார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பெங்களூரு அரசு உயர்நிலை பள்ளியில் அறிவியல் ஆசிரியராக துரைசுவாமி பணியாற்றினார்.

இவர் கடந்த 40 ஆண்டுகளாக ஊழலுக்கு எதிராகவும், பெண்கள், தலித்துகள், விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் போராட்டங்களில் ஈடுபட்டார். பெங்களூருவில் வசித்த துரைசுவாமி கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் நேற்று உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதில் 103 வயதில் துரைசுவாமியின் உயிர் பிரிந்தது.




சுதந்திரப் போராட்ட வீரர்எச்.எஸ்.துரைசுவாமிHS duraiswamy passed away

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x