

மும்பை நீதிமன்றம் மன்னிப்பு வழங்குவதாக இருந்தால், மும்பை தாக்குதல் வழக்கில் அப்ரூவராக மாறத் தயார் என அமெரிக்க தீவிரவாதி டேவிட் ஹெட்லி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பிறந்த டேவிட் ஹெட்லி, கடந்த 2006, 2007, 2008-ம் ஆண்டுகளில் மும்பையில் சுற்றுப்பயணம் செய்து, முக்கிய இடங்களை வீடியோவில் பதிவு செய்து, அவற்றை பாகிஸ்தானிலுள்ள லஷ்கர் தீவிரவாதிகளிடம் ஒப்படைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட ஹெட்லிக்கு அமெரிக்க நீதிமன்றம் 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
இந்நிலையில், இன்று நீதிமன்ற வழக்கு விசாரணைக்காக காணொளி காட்சி மூலம் சிறப்பு நீதிமன்றத்தின் முன் டேவிட் ஹெட்லி ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அப்போது வாசித்துக் காட்டப்பட்டன.
கடந்த நவம்பர் 18-ம் தேதி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஏ. சனாப், ஹெட்லியை இவ்வழக்கில் குற்றவாளி என அறிவித்தார். இந்நிலையில் அப்ரூவராக மாறத்தயார் என ஹெட்லி தெரிவித்துள்ளார்.