

டாடா ஸ்டீல் நிறுவனம் கரோனாவால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்துக்கு, அவரது 60 வயது வரை கடைசியாக பெற்ற மாத ஊதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
சமூக பாதுகாப்பு திட்டத்தின்படி ஊழியர்களின் குடும்பத்தினரைக் காக்க இப்புதிய அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டுள்ளது. பணியிலிருக்கும்போது நோய்தொற்றுக்கு உள்ளாகி உயிரிழக்கும் முன்கள ஊழியர்களின் குழந்தைகளின் கல்வி செலவை நிறுவனமே ஏற்கும் என்றும் அறிவித்துள்ளது. அதேபோல குடும்பத்தினர் டாடா ஸ்டீல் நிறுவன குடியிருப்பு, மருத்துவமனை வசதிகளையும் பயன்படுத்திக்கொள்ள லாம் என்றும் அந்நிறுவனம் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.