Published : 25 May 2021 11:15 AM
Last Updated : 25 May 2021 11:15 AM

​​​​​​​தமிழகத்திற்கு 1000 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் விநியோகம்

புதுடெல்லி

தமிழகமும், கர்நாடகாவும் தலா 1000 மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான திரவ மருத்துவ ஆக்சிஜனை பெற்றுள்ளன.

பல்வேறு தடைகளையும் கடந்து நாடு முழுவதும் திரவ மருத்துவ ஆக்சிஜனை எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் வழங்கும் இந்திய ரயில்வே, இதுவரை 997 டேங்கர்களில் 16023 மெட்ரிக் டன்ஆக்சிஜனை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்துள்ளது.

இதுவரை 247 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் மாநிலங்களுக்கு மருத்துவ ஆக்ஸிஜன் வழங்கப்பட்டுள்ளது. ஒரு நாளில் மிக அதிகமாக 1142 மெட்ரிக் டன் பிராணவாயு கொண்டு செல்லப்பட்டது. இதற்கு முன்பாக கடந்த 20-ஆம் தேதி 1118 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ரயில்களில் கொண்டு செல்லப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.

தென் மாநிலங்களைப் பொறுத்தவரையில், தமிழகமும், கர்நாடகாவும் தலா 1000 மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான திரவ மருத்துவ ஆக்சிஜனை பெற்றுள்ளன.

கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி, மகாராஷ்டிராவில் இருந்து 126 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் முதன்முதலாகத் தனது பயணத்தைத் துவக்கிய ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில், ஒரு மாத காலத்தில் 14 மாநிலங்களுக்கு 16000 மெட்ரிக் டன் திரவ மருத்துவப் ஆக்சிஜனை வழங்கியுள்ளது.

தமிழ்நாடு, உத்தராகண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, தெலங்கானா, பஞ்சாப், கேரளா, டெல்லி, உத்தரப் பிரதேசம், அசாம் ஆகிய 14 மாநிலங்கள் இதுவரை ஆக்சிஜனை பெற்றுள்ளன.

இதுவரை தமிழகத்திற்கு 1024 மெட்ரிக் டன், மகாராஷ்டிராவிற்கு 614 மெட்ரிக் டன், உத்தரப் பிரதேசத்திற்கு 3649 மெட்ரிக் டன், மத்தியப் பிரதேசத்திற்கு 633 மெட்ரிக் டன், டெல்லிக்கு 4600 மெட்ரிக் டன், ஹரியாணாவிற்கு 1759 மெட்ரிக் டன், ராஜஸ்தானிற்கு 98 மெட்ரிக் டன், கர்நாடகாவிற்கு 1063 மெட்ரிக் டன், உத்தராகண்டிற்கு 320 மெட்ரிக் டன், ஆந்திரப் பிரதேசத்திற்கு 730 மெட்ரிக் டன், பஞ்சாப்பிற்கு 225 மெட்ரிக் டன், கேரளாவிற்கு 246 மெட்ரிக் டன், தெலங்கானாவிற்கு 976 மெட்ரிக் டன், அசாமிற்கு 80 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x