Published : 25 May 2021 09:25 AM
Last Updated : 25 May 2021 09:25 AM

ஆக்சிஜன் சிகிச்சைக்கும் மியூகோர்மைகோசிஸ் பாதிப்புக்கும் தொடர்பில்லை: எய்ம்ஸ் 

ஆக்சிஜன் சிகிச்சைக்கும், மியூகோமைகோசிஸ் பாதிப்புக்கும் தொடர்பில்லை என எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறினார்.

கோவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடையும் நோயாளிகளுக்கு பொதுவாக ஏற்படும் பூஞ்சை தொற்றுகளில் மியூகோர்மைகோசிஸ்-ம் ஒன்று. இந்த பாதிப்பு ஏற்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. ஆனால் இது தொற்று நோய் அல்ல. இது கோவிட்-19 போல், ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவாது.

இதை புதுடெல்லி எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, அளித்த பேட்டியில் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:

மியூகோர்மைகோசிஸ் என அழையுங்கள், கருப்பு பூஞ்சை என அழைக்க வேண்டாம். மியூகோர்மைகோசிஸ் பற்றி பேசும்போது, கருப்பு பூஞ்சை என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் இருப்பது சிறந்தது. இதன் மூலம் பல குழப்பங்களை தவிர்க்க முடியும்.
கருப்பு பூஞ்சை என்பது மற்றொரு வகையைச் சேர்ந்தது. வெள்ளை பூஞ்சை பகுதியில், கரும்புள்ளிகள் ஏற்பட்டதன் காரணமாக, மியூகோர்மைகோசிஸ் கருப்பு பூஞ்சையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது’’ என அவர் கூறினார்.

பாதிப்பின் தன்மை, அறிகுறி மற்றும் சிகிச்சை:

இந்த நோய் பாதிப்பு பற்றி டாக்டர் குலேரியா கூறுகையில், ‘‘ கேண்டிடா என்ற பூஞ்சை தொற்று வாய், வாயின் உட்பகுதி மற்றும் நாக்கில் வெள்ளை திட்டுகளாக காணப்படும். பிறப்புறப்புகளிலும் இது பாதிப்பை ஏற்படுத்தும். பாதிப்பு மோசமானால் ரத்தத்தில் காணப்படும்.

அரிதாக ஏற்படும் அஸ்பெர்கிலோசிஸ், நுரையீரலுக்குள் ஊடுருவி குழியை ஏற்படுத்தும். ஆனால் கோவிட்-19 பாதித்தவர்களுக்கு பெரும்பாலும் மியூகோர்மைகோசிஸ் பாதிப்புதான் ஏற்படுகிறது. அஸ்பெர்கிலோசிஸ் அரிதாக காணப்படுகிறது. சிலருக்கு கேண்டிடா ஏற்படுகிறது’’ என்றார்.

மியூகோர்மிகோசிஸ் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளவர்கள் பற்றி அவர் கூறுகையில், ‘‘ மியூகோமைகோசிஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களில் 90 முதல் 95 சதவீதம் பேர் நீரிழிவு நோயுடையவர்கள் அல்லது ஸ்டீராய்டு மருந்து எடுத்துக் கொண்டவர்களுக்கு ஏற்படுகிறது. மற்றவர்களுக்கு இந்த பாதிப்பு மிகவும் அரிதாகவே காணப்படுகிறது’’ என்றார்.

ஆக்சிஜன் சிகிச்சைக்கும், மியூகோமைகோசிஸ் பாதிப்புக்கும் தொடர்பில்லை:

‘‘ஆக்சிஜன் சிகிச்சை எடுக்காமல், வீட்டில் சிகிச்சை பெற்ற பலருக்கும், மியூகோர்மைகோசிஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், ஆக்சிஜன் சிகிச்சைக்கும், மியூகோர்மைகோசிஸ் பாதிப்பு ஏற்படுவதற்கும் உறுதியான தொடர்பு இல்லை’’ என டாக்டர் ரன்தீப் குலேரியா கூறினார்.

நீரிழிவு நோயாளிகளுக்கு, பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால், அவர்கள் முறையான சுகாதாரத்தை பின்பற்றுவது மிக முக்கியம். ஆக்சிஜன் செறிவூட்டிகள் பயன்படுத்துபவர்கள், ஈரப்பதமூட்டிகள் (humidifiers) சீரான இடைவெளியில் சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x