Published : 25 May 2021 03:11 AM
Last Updated : 25 May 2021 03:11 AM

குதிரையின் இறுதி சடங்கில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு: ஊரடங்கை மீறியதாக‌ வழக்கு பதிவு

கர்நாடக மாநிலத்தில் தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரவுவதால், ஜூன் 7-ம் தேதி வரை ஊரடங்குஅமல்படுத்தப்பட்டுள்ளது. நெருங்கிய உறவினர்களின் இறப்பு நிகழ்ச்சிகளில் கூட 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட் டுள்ளது.

இந்நிலையில், பெலகாவி மாவட்டம் கோகாக் அருகேயுள்ள கடசித்தேஸ்வர் மடத்துக்கு சொந்தமான குதிரை நேற்று முன் தினம் இறந்தது. இறந்த குதிரையை தெய்வீக குதிரையாக மக்கள்கருதுவதால் அதன் இறுதி சடங்கில் விதிமுறைகளை மீறி 500-க்கும்மேற்பட்டோர் பங்கேற்றனர்.

குதிரையின் இறுதி ஊர்வல காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து பெலகாவி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லட்சுமண் நிம்பர்கி தலைமை யிலான போலீஸார், ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக கடசித் தேஸ்வர் மடத்தின் நிர்வாகிகள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மரடிமாத், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளை மூடி சீல் வைத்தனர். குதிரையின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற அனைவரையும் தனிமைப்படுத்தி, பரிசோதனை மேற்கொள்ளும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x