இளம்பெண்ணை வேவுபார்த்த விவகாரம் விசாரணையை கைவிடுகிறது மத்திய அரசு

இளம்பெண்ணை வேவுபார்த்த விவகாரம் விசாரணையை கைவிடுகிறது மத்திய அரசு
Updated on
1 min read

குஜராத் போலீஸாரால் இளம் பெண் வேவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் நீதி விசாரணை யைக் கைவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவரை குஜராத் மாநில போலீஸார் வேவு பார்த்த விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இப்பிரச்சினையில், குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது.

இந்த விவகாரத்தை விசாரிக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, கடந்த ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி நீதி விசா ரணைக்கு உத்தரவிடப்பட்டது. உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், வேவு பார்ப்பு விவகாரம் விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங், அருண் ஜெட்லி தொலைபேசி உரையாடல் தகவல்கள் வெளியீடு உள்ளிட்ட விவகாரங்களும் விசாரணை வரம்பில் சேர்க்கப்பட்டன.

இந்த விசாரணை ஆணையத் துக்கு தலைமை ஏற்க எந்த ஓய்வுபெற்ற நீதிபதியும் முன்வர வில்லை. இச்செய்தியை ‘தி இந்து’ முதன் முறையாக வெளி யிட்டது. இதையடுத்து, விசா ரணையைத் தொடரும் எண்ணம் இல்லை என்று மத்திய சொலி சிட்டர் ஜெனரலாக இருந்த மோகன் பராசரன் உச்ச நீதிமன்றத்தில் அதி காரப்பூர்வமாக தெரிவித்தார்.

மத்தியில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தையடுத்து, கடந்த ஆட்சியில் எடுக்கப்பட்ட அரசியல் ரீதியான நடவடிக்கைகளை மறு பரிசீலனை செய்யும் பணியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. அதன்படி, இளம்பெண் வேவு பார்ப்பு விசாரணை ஆணையம் அமைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வாபஸ் பெற முடி வெடுக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜுஜு இதற்கான முயற்சியில் இறங்கி உள்ளார்.

நீதி விசாரணை ஆணைய உத்தரவை கைவிட அமைச் சரவை குறிப்பு தயாரிக்கப்பட உள்ளது. இக்குறிப்பு அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப் படும். அதன்படி, விசாரணை ஆணைய உத்தரவு ரத்து செய்யப்பட உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in