

அம்பாலா கன்டோன்ட்மென்ட் பகுதியில் மகேஷ்நகரில் சா கல்யாண் அறக்கட்டளை மருத் துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த 24-ம் தேதி 16 பேருக்கு கண் புரை அறுவை சிகிச்சை நடைபெற்றது.
ஆனால் அறுவை சிகிச்சைக் குப் பிறகு நோயாளிகளுக்கு கண்ணில் நோய்த் தொற்று ஏற்பட்டு பார்வை பாதிக்கப்பட் டுள்ளது. பாதிக்கப்பட்ட 16 பேரும் சண்டிகரில் உள்ள பிஜிஐ மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.
அங்கு அவர்களைப் பரிசோதித்த டாக்டர்கள், தவறான கண்புரை அறுவை சிகிச்சை யால் 16 பேருக்கும் பார்வை யிழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஹரியாணா மாநில அரசு உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மருத்துவமனை சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி டாக்டர் வினோத் குமார் கூறியபோது, சம்பந்தப்பட்ட மருத்துவமனை கண் சிகிச்சை முகாம் நடத்த எங்களிடம் முறைப்பட அனுமதி பெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.