Published : 23 May 2021 10:56 am

Updated : 23 May 2021 10:57 am

 

Published : 23 May 2021 10:56 AM
Last Updated : 23 May 2021 10:57 AM

இந்தியாவில் கரோனாவிலிருந்து 3.55 லட்சம் பேர் குணமடைந்தனர்; 4ஆயிரத்துக்கும் கீ்ழ் உயிரிழப்பு குறைந்தது

india-records-2-40-lakh-fresh-covid-19-cases-3-741-fatalities
பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி


இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் லாக்டவுன் நடவடிக்கை காரணமாக, கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3.55 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்புயுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 40ஆயிரத்து 842 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2 கோடியே 65 லட்சத்து 30 ஆயிரத்து 132 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 7-வது நாளாக 3 லட்சத்துக்கும் குறைவாக கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 28 லட்சத்து 5ஆயிரத்து 399 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தத் தொற்றில் 10.57 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்து 3 லட்சத்து 55 ஆயிரத்து 102 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கரோனாவிலிருந்து 2 கோடியே 34 லட்சத்து 25 ஆயிரத்து 467 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 3ஆயிரத்து 741 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2 லட்சத்து 99 ஆயிரத்து 266 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 682 பேரும், தமிழகத்தில் 448 பேரும், கர்நாடகாவில் 451 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 218 பேரும் உயிரிழந்தனர்.

டெல்லியில் 182 பேரும், பஞ்சாப்பில் 201 பேரும், கேரளாவில் 176 பேரும், மேற்கு வங்கத்தில் 154 பேரும், உத்தரகாண்டில் 134 பேரும், ராஜஸ்தானில் 115பேரும், சத்தீஸ்கரில் 103 பேரும், ஹரியாணாவில் 98 பேரும், ஆந்திராவில் 118 பேரும் உயிரிழந்தனர்.

ஐசிஎம்ஆர் அறிவிப்பின்படி, இதுவரை 32 கோடியே 86 லட்சத்து 7 ஆயிரத்து 937 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 21 லட்சத்து 23 ஆயிரத்து 782 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தவறவிடாதீர்!



COVID-192.40 lakh fresh COVID-19 caseCoronavirusUnion Health MinistryBelow the 3 lakh-markகரோனா வைரஸ்2.40 லட்சம் பேர் பாதிப்புமத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்3 லட்சத்துக்கும் குறைவான பாதிப்பு4 ஆயிரத்துக்கும் குறைந்த உயிரிழப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x