அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read


அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும், சார்ந்திருப்போருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதராத்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கம் கடிதம் எழுதியுள்ளது.

முன்னதாக 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனியார் நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களிலும் பணியாற்றினால், அவர்களுக்கு அலுவலகத்திலேயே கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது.

அதன்பின் 3-வது கட்ட தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டு 18 வயது முதல் 44 வயதுவரை உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நநிலையில், தனியார்,அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும், சார்ந்திருப்போருக்கும் பணியிடங்களிலேயே தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு எழுதிய கடிதத்தில் “ அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் விதிகளுக்கு உட்பட்டு, பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினர், சார்ந்திருப்போருக்கும் பணியாற்றும் இடங்களில் தடுப்பூசி செலுத்தலாம் அல்லது தடுப்பூசி மையத்திலும் செலுத்திக்கொள்ளலாம்.

இந்த திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்கள் தடுப்பூசிக்காக எந்த தனியார் மருத்துவமனையுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்களோ அவர்கள் மூலம் தடுப்பூசியைக் கொள்முதல் செய்து ஊழியர்களின் குடும்பத்தாருக்கு தடுப்பூசி செலுத்தலாம்.

அதேசமயம் அரசு ஊழியர்களின் குடும்பத்தினர், சார்ந்திருப்போர் 45 வயது அதற்கு மேற்பட்டவர்களாக இருந்தால், அரசின் தடுப்பூசி மையத்துக்குச் சென்று இலவசமாகத் தடுப்பூசி செலுத்தலாம்.
அரசு ஊழியர்களின் குடும்பத்தினர், சார்ந்திருப்போர் 18 முதல் 44 வயதுடையவர்களாக இருந்தால், அந்தந்த மாநிலஅரசு கொள்முதல் செய்யும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in