Last Updated : 23 May, 2021 05:46 AM

 

Published : 23 May 2021 05:46 AM
Last Updated : 23 May 2021 05:46 AM

இந்து பேராசிரியரின் இறுதி சடங்கை செய்த முஸ்லிம் எம்.பி.

சென்னையை பூர்வீகமாக கொண்ட பேராசிரியர் சாவித்ரி விஸ்வநாதன் (80) டெல்லி பல்கலைக்கழகத்தின் ஜப்பானிய மொழித் துறை தலைவராக பணியாற்றினார். 2001-ல் ஓய்வு பெற்றபின் பெங்களூருவுக்கு இடம்பெயர்ந்த இவர், தொடர்ந்து ஜப்பானிய மொழி வளர்ச்சிக்கான பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

ஜப்பானிய எழுத்தாளர் ஷிமாசகி டசன் எழுதிய ‘ஹகாய்' நாவலை இந்தியில் ‘அவக்னா' என்ற பெயரிலும், தமிழில் ‘தலித்
படும்பாடு' என்ற பெயரிலும் மொழிபெயர்த்தார். ஜப்பான் மொழி வளர்ச்சிக்காக பாடுபட்டதற்காக சாவித்ரி விஸ்வ நாதனுக்கு ஜப்பான் பிரதமரின் விருது வழங்கப்பட்டது.

பெங்களூருவில் தங்கை மஹாலட்சுமியுடன் வசித்துவந்த சாவித்ரி விஸ்வநாதன் கரோனா தொற்றால் கடந்த 5-ம் தேதி உயிரிழந்தார். இதைய‌டுத்து நண் பர்களின் உதவியோடு அவரது உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் சாவித்ரி விஸ்வநாதனின் அஸ் தியை கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி. சையத் நசீர் ஹூசேன் ஸ்ரீரங்கப்
பட்டினத்தில் உள்ள காவிரி ஆற்றில் கரைத்தார். இதில் அவரது மனைவி மற்றும் மகன்களும் பங்கேற்று இறுதி சடங்குகளை நிறைவேற்றினர்.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. சையத் நசீர் ஹூசேன் கூறும்போது, ‘‘டெல்லி பல்கலைக்கழகத்தில் நான் பணியாற்றிய போது சாவித்ரி விஸ்வநாதன் அறிமுகமானார். எனது குடும்ப நண்பர் என்பதை காட்டிலும் ஒரு தாயை போன்ற வர். அவரது தங்கைக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத் துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் உறவினர்கள் வெளியூரில் இருந்து வர முடியாமல் போய்விட்ட‌து. இஸ்லாமியனாகிய நான் அஸ்தியை கரைத்து இறுதி சடங்குகளை செய்யட்டுமா? அதில் எதுவும் சிக்கல் இருக்கிறதா என அவரது தங்கையிடமும், இந்துமத குருக்களிடமும் கேட்டேன். இரு வரும் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து, எனது குடும்பத்தாருடன் ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு வந்து சாவித்ரி விஸ்வநாதனுக்கு இந்துமுறைப்படி திதி கொடுத்து பூஜைகள் மேற்கொண்டேன். இதனால் அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாமல் நாங்களும் மிகுந்த மகிழ்ச்சியோடும் உணர்ச்சி பெருக்கோடும் இருக்கிறோம்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x