

கரோனா இரண்டாம் அலை தீவிரமாக உள்ள சூழலில் புதிதாக கருப்புப் பூஞ்சை தொற்று பரவி வருகிறது. மிக அரிதான இந்த நோய் கரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் நோயாளிகளிடம் உறுதி செய்யப்பட்டதாகக் கூறப் பட்டுள்ளது.
உயிருக்கு ஆபத்தான இந்த தொற்றுக்கு ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சை அவசியம் என அறிவுறுத்தப்பட் டுள்ளது. இந்த நோய்க்கான சிகிச்சைக்கு ஆம்ஃபோடெரிசின் பி மிகவும் முக்கிய மருந்தாக உள்ளது.
தொற்று ஏற்பட்டுள்ளதன் அடிப்படையில் மாநிலங்களுக்கு 23,680 ஆம்ஃபோடெரிசின் பி மருந்துகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.
இந்தியாவில் 8,848 பேருக்கு இந்தத் தொற்று உறுதி செய் யப்பட்டுள்ளது. இதுவரை குஜராத்தில் அதிகபட்சமாக 2,281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு வழிமுறைகள்
இந்த நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மூன்று முக்கிய விஷயங்களை எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா பட்டியலிட்டுள்ளார். அவை, 1. இரத்தத்தில் சர்க்கரை யின் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும், 2 ஸ்டெராய்டு எடுப்பவர்கள் தொடர்ந்து சர்க் கரை அளவை கண்காணிக்க வேண்டும், 3. ஸ்டெராய்டு எடுத் துக்கொள்ளும் தருணம் மற்றும் அளவு முக்கியம். - பிடிஐ