Published : 23 May 2021 04:57 AM
Last Updated : 23 May 2021 04:57 AM

கருப்பு பூஞ்சை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

மும்பை

கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து மூத்த மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

கரோனா தொற்றால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இந்த நோய், புதிய
மருத்துவ சவாலாக உருவெடுத்துள்ளது. இதுகுறித்து கொல்கத்தா மருத்துவர் ஆர்.கே.சிங், மும்பை மருத்துவர் சுஷாங்க் ஜோஷி,
டெல்லி மருத்துவர் அனுப் மிஸ்ரா ஆகியோர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:

கருப்பு பூஞ்சை நோய் கண், நுரையீரலை அதிகம் பாதிக்கிறது. கரோனா நோயாளிகளில் கட்டுப்பாடற்ற நீரழிவு நோயால் பாதிக்
கப்பட்டவர்கள், ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் உட்கொண்டவர்களுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்தியாவில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் 2 பங்கு பேர் நீரழிவு நோயாளிகள் ஆவர். உலகளாவிய அளவில் 17 லட்சம் மக்கள் தொகையில் 0.005 சதவீதம் பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்தியாவில் 1,000 பேரில் 0.14 சதவீதம் பேருக்கு இந்த தொற்று ஏற்படுகிறது. சர்வதேச புள்ளிவிவரத்தை ஒப்பிடும்போது, இந்தியாவில் 80 சதவீதம் அளவுக்கு அதிக கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு உள்ளது.

தற்போதைய நிலையில் இந்தியாவில் 30 லட்சம் கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் சுமார் 7,000-க்கும் மேற்பட்டோருக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், ஸ்டீராய்டு மருந்து உட்கொள்பவர்கள், கட்டுப்பாடற்ற நீரழிவு நோயால் பாதிக்
கப்பட்டவர்களை கருப்பு பூஞ்சை எளிதில் தொற்றுகிறது. இவை தவிர ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக இரும்பு சத்து உடையவர்கள், வெள்ளை அணுக்கள் குறைவாக இருப்பவர்கள், சுகாதாரமற்ற ஆக்சிஜன் செறிவூட்டிகள் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்
டோருக்கும் இந்த தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 14 நாட்கள் முதல் 21 நாட்கள் வரை பாதிப்பு இருக்கும். இந்த காலத்தில் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படாமல் இருக்க நோயாளிகள் மூக்கு, தொண்டையை சுத்தமாக பராமரிப்பதில் கவனமாக இருக்க வேண்டும். கரோனாவில் இருந்து குணமடைந்த பிறகும் 3 மாதங்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு தொழிற்சாலைகளுக்கான ஆக்சிஜன் சிலிண்டர்கள் தற்போது மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

ஆலைகளுக்கான ஆக்சிஜன் சிலிண்டர்கள் சுத்தமாக பராமரிக்கப்படுவது கிடையாது. அசுத்தமான ஆக்சிஜன் சிலிண்டர்களால் கரோனா நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று ஏற்படுகிறது. இந்த விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்று டெல்லி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x