

மக்களவையில் நேற்று எழுத்துப் பூர்வமாக பதில் அளித்த ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா, ‘‘இந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி வரையில் மொத்தம் 6,141 ரயில் பயண டிக்கெட் பரிசோதகர்கள் பணியிடங்கள் காலி யாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வுகள் நடத்தும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன’’ என்றார்.
இதே போல் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, பல்வேறு விரைவு ரயில்களில் 500 பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. ஏற்கெனவே ராமேஸ்வரம் விரைவு ரயில் உட்பட பல்வேறு விரைவு ரயில்களில் சோதனை அடிப்படையில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.