

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் திமுக தலைவர் கருணாநிதியும் போட்டிபோட்டுக் கொண்டு அரசியல் செய்கிறார்கள்.இருவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு மாறி, மாறி கடிதம் எழுதுவது துரதிருஷ்டவசமானது; தேவையற்றது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை பெங்களூ ரில் உள்ள கன்னட சாகித்ய பரிஷத் நிறுவனத்தில் நடைபெற்ற அடிக் கல் நாட்டுவிழாவில் கர்நாடக முதல்வர் சித்தராமையா பங்கேற் றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
'தமிழக அரசின் காவிரி மேலாண்மை வாரியம் அமைக் கும் திட்டம் கர்நாடக விவசாயி களுக்கும் பொதுமக்களுக்கும் முற்றிலும் எதிரான ஒன்று. இருப்பினும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரிலும் கடிதத்தின் வாயிலாகவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இதனை கர்நாடக அரசும் அரசி யல் கட்சிகளும் ஒன்றிணைந்து கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான திமுக தலைவர் கருணாநிதியும் காவிரி மேண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என பிரத மருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.ஒரே நேரத்தில் தமிழ் நாட்டில் இருக்கும் இரு முக்கிய தலைவர் களும் மோடிக்கு மாறி, மாறி கடிதம் எழுதுவது துரதிருஷ்ட வசமானது. தேவையற்றது. ஏனென்றால் காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகமும், தமிழகமும் தாக்கல் செய்துள்ள பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. அந்த மனுக்கள் மீதான விசாரணையில் கர்நாடகா விற்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். இதனால்தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசின் மூலம் காரியத்தை சாதிக்க பார்க்கிறார்.
மேலும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பிலும்,உச்சநீதிமன்ற தீர்ப்பிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற பரிந்துரையே இல்லை. அப்படி இருக்கும்போது மத்திய அரசால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது. எக்காரணம் கொண்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப் பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பேச்சுவார்த்தைக்கு ஜெ. தயாரில்லை
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, ஆண்டுதோறும் தமிழகத்திற்கு 192 டி.எம்.சி.தண்ணீர் விட வேண்டும். ஆனால், கர்நாடக அரசு ஆண்டுதோறும் அதனைவிட கூடுதலான தண்ணீரை தமிழகத் திற்கு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு 260 டி.எம்.சி.தண்ணீரை தமிழ்நாட்டிற்கு வழங்கி இருக் கிறோம்.
கர்நாடகத்தில் பருவமழை கூடுதலாக பொழிந்தாலும், அறவே பொய்த்துப் போனாலும் தமிழ்நாட்டிற்கு போதிய தண்ணீரை கர்நாடகம் வழங்குகிறது. இத னால் பல நேரங்களில் கர்நாடகம் போதிய தண்ணீர் இன்றித் தவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது.
ஆனால், திமுக தலைவர் கருணாநிதியும்,தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் காவிரி விவ காரத்தில் அரசியல் செய்கிறார்கள்.இந்த விவகாரத்திற்கு மத்திய அரசு மூலமாகவோ,உச்சநீதிமன்றம் மூலமாகவோ தீர்வு காண்பது கடினமானது. இதற்கு பேச்சு வார்த்தையின் மூலமாகவே தீர்வு காணமுடியும்.
கர்நாடக அரசு அனைத்து விதமான பேச்சுவார்த்தைக்கும் தயராக இருக்கிறது. ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை.காவிரி விவகாரத்தை பொறுத்த வரை கர்நாடகத்திற்கு உரிய நியாயம் கிடைக்க சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது'' என்றார்.