Published : 21 May 2021 03:11 AM
Last Updated : 21 May 2021 03:11 AM

கரோனா வைரஸ் காற்றில் பரவுவதை தடுக்க 2 முகக் கவசம் அணிவது உட்பட புதிய வழிகாட்டி நெறிமுறை வெளியீடு: நீர்த் திவலைகள் 10 மீட்டர் தூரம் செல்வதாக தகவல்

புதுடெல்லி

நுண்ணிய நீர்த் திவலைகள் காற்றில் 10 மீட்டர் தூரம் பரவும். எனவே, கரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க 2 முகக் கவசங்கள் அணிவது உட்பட புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மத்தியஅரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா 2-வது அலை மிக அதிகமாக உள்ளது. இதுவரை 2.57 கோடி பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கையும் 2.87 லட்சமாகிவிட்டது. இந்நிலையில், கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ‘கரோனா பரவலை தடுப்போம்; தொற்றை நசுக்குவோம்’ என்ற தலைப்பில் புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜய ராகவன் நேற்று பரிந்துரைத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

தும்மல், இருமலின்போது வெளியேறும் நுண்ணிய நீர்த் திவலைகள் 10 மீட்டர் தூரம் வரை பரவும் வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் கரோனா வைரஸ் அதிகமாக பரவும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்கள் 2 முகக் கவசங்களை அணிய வேண்டும். அல்லது என்-95 முகக் கவசங்கள் அணியலாம். காற்றோட்டம் உள்ள இடத்தில் இருப்பதுகரோனா தொற்றில் இருந்து தப்பிக்கஉதவும். ஏ.சி. அறையில் இருப்பதுகரோனா தொற்றுக்கு அதிகம் வழிவகுக்கும். கதவு, ஜன்னல்களை அடைத்துவிட்டு ஏ.சி.யை இயக்குவதால், அறைக்குள் கரோனா வைரஸ் அடைந்துவிடும். இதனால் அறைக்குள் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வைரஸ் தொற்றும் வாய்ப்பு அதிகம். வீடு, அறைகளுக்குள் வெளிக்காற்று வந்து செல்வதன்மூலம் கரோனா வைரஸ் அதிகரிப்பது குறைக்கப்படும்.

எந்த அறிகுறியும் இல்லாதவர்களிடம் இருந்துகூட கரோனா வைரஸ் தொற்றும்அபாயம் உள்ளதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள். கரோனா பாதித்தவரின் மூக்கு, வாய்ப் பகுதிகளில் இருந்து வெளியேறும் எடை அதிகம் உள்ள நீர்த் துளிகள் 2 மீட்டர் தூரம் வரை பரவி கீழே விழும். ஆனால், அவரிடம் இருந்து நுண்ணிய நீர்த் திவலைகள் 10 மீட்டர் வரைகூட பரவும். எனவே, அனைத்துமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

தொற்று உள்ளவரிடம் இருந்து வெளியேறும் வைரஸ் எந்தப் பொருட்கள் மீதும் படியலாம். எனவே, வீட்டு கதவுகள், கதவு கைப்பிடிகள், மின்சார ஸ்விட்ச்கள், மேசை, நாற்காலிகள், தரை போன்ற அனைத்து பொருட்களையும் அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும்.

இரட்டை முகக் கவசம் அணியும்போது முதலில் சர்ஜிக்கல் மாஸ்க் அணியுங்கள். அதன்மேல் துணி முகக் கவசம்அணியுங்கள். சர்ஜிக்கல் மாஸ்க் இல்லாதவர்கள், 2 துணி முகக் கவசங்களை அணியலாம். பெரிய அலுவலகங்கள், மால்களில்மின்விசிறிகளைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

இவ்வாறு புதிய வழிகாட்டி நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x