டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி: ஜே.பி. நட்டா உறுதி

டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி: ஜே.பி. நட்டா உறுதி
Updated on
1 min read

ராஜஸ்தான் மாநிலத்தில் கரோனா தொற்று நிலவரம் குறித்து அந்த மாநில பாஜக தலைவர் சதீஷ் புனியா மற்றும் மாநில பாஜக எம்.பி.க்களுடன் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நேற்று காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது ஜே.பி.நட்டா கூறியதாவது:

கடந்த மார்ச் மாதத்திலேயே கரோனா தொற்றின் இரண்டாவது அலையை சமாளிக்க தயாராக இருக்குமாறு மாநில முதல்வர் களை பிரதமர் மோடி எச்சரித்தார். வெறும் 9 மாதங்களில் கரோனா தொற்றுக்கு இரண்டு தடுப்பூசிகளை இந்தியா தயாரித்தது. இதுவரை நாடு முழுவதும் 18 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்துக்குள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும். அனைத்து மாநிலங்களுக்கும் ஆக்சிஜன், மருந்துகளின் கையிருப்பு மற்றும் விநியோகத்தை மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த கரோனா தொற்று காலத்தில் கூட காங்கிரஸ் பொய் களை பரப்பி வருகிறது. கரோனா தொற்று குறித்து அரசு மற்றும் பிரதமர் மோடியின் நற்பெயரை கெடுக்க காங்கிரஸின் டூல்கிட் விவகாரம் வெளியான பின்னர் அதன் உண்மையான முகம் அம்பலமாகிவிட்டது. கரோனா தொற்று குறித்து மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து குழப்பம் ஏற்படுத்துவதன் மூலம் மக்களின் மன உறுதியை அழிக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. இந்த முயற்சி வெற்றி பெறாது. இவ்வாறு ஜே.பி. நட்டா கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in