ரிக்ஷாவில் அக்னி ஹோமத்துடன் ஊர்வலம்; ஹனுமன் மந்திரம் ஓதி கரோனாவை விரட்டும் பாஜக தலைவர்

ரிக்ஷாவில் அக்னி ஹோமத்துடன் ஊர்வலம்; ஹனுமன் மந்திரம் ஓதி கரோனாவை விரட்டும் பாஜக தலைவர்
Updated on
1 min read

உத்தரப்பிரதேசத்தின் ரிக்ஷாவில் அக்னி ஹோமத்துடன் ஊர்வலமாக ஹனுமன் மந்திரம் ஓதி கரோனாவை விரட்ட முயற்சிக்கப்பட்டுள்ளது. இதை அம்மாநிலத்தின் மீரட்டில் பாஜக தலைவர் கோபால் சர்மா செய்துள்ளார்.

இரண்டாவது பரவலில் கரோனா உத்தரப்பிரதேசம் மீரட்டிலும் அதிகரித்துள்ளது. இதனால், அந்நகரின் பாஜக தலைவரான கோபால் சர்மா கரோனாவை விரட்ட ஒரு புதிய முயற்சி எடுத்துள்ளார்.

இதில், அவர் ஒரு சைக்கிள் ரிக்ஷாவின் மீது அக்னி ஹோமத்தை வளர்த்தார். இதை தனது மூன்று தொண்டர்களுடன் நகரின் தெருக்களில் தள்ளியபடி ஊர்வலமாக வந்தார்.

அப்போது, அனுமன் மந்திரங்களை ஓதியபடியும் வந்தவர்கள் அதனால் கரோனா அகலும் என நம்பினர். இதன் இடையில், ‘ஜெய் ஸ்ரீராம்’, ‘ஜெய் ஹனுமான்’ எனத் தொண்டர்கள் கோஷங்களையும் எழுப்ப, கோபால் சர்மா அவ்வப்போது சங்கு ஊதியபடி வந்தார்.

அதேசமயம், கோபால் சர்மாவுடன் வந்த அவரது தொண்டர்கள் கரோனா பாதுகாப்பிற்காக முகக்கவசங்கள் அணிந்திருந்தனர், அக்னி ஹோமத்திலிருந்து கிளம்பும் புகையால் அப்பகுதியின் வாயு மண்டலத்தில் ஆக்சிஜன் அதிகரிக்கும் என்பது அவரது நம்பிக்கை.

இதுகுறித்து பாஜகவின் மூத்த தலைவரான கோபால் சர்மா கூறும்போது, ‘ஹனுமன் மந்திரத்துடன் இந்த சங்கொலியை கேட்டு கரோனா வைரஸ் ஓடி விடும். ஹோமத்தின் புகையினால் வாயு மண்டலத்தில் ஆக்சிஜனை கூட்டி, பொதுமக்களுக்கு பலன் அளிக்கும்.’ எனத் தெரிவித்தார்.

இந்த காட்சிகள் விடோவோவில் பதிவாகி சமூகவலைதளங்களில் பல்வேறு சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில், மதநம்பிக்கையும், மருத்துவமும் இருவேறு திசைகள்கொண்டவை என்பது புரிந்துகொள்ளாமல் இருப்பதாக கருத்துக்களும் பதிவாகி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in