

கேரள தேர்தலில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி அணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. பினராயி விஜயன் மீண்டும் முதல்வராக இன்று பதவியேற் கிறார். மார்க்சிஸ்ட் சார்பில் அமைச்சர்களாக பதவியேற்போர் பட்டியலில் கடந்த ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்து கரோனா தொற்றை சிறப்பாக கையாண்டதாக பாராட்டு பெற்ற கே.கே.ஷைலஜாவுக்கு இந்த முறை அமைச்சரவையில் இடமளிக்கவில்லை.
ஆனால், அமைச்சரவையில் முதல்வர் பினராயி மருமகன் முகமது ரியாசுக்கு இடமளிக்கப் பட்டுள்ளது. இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் பினராயி விஜயனுக்கு எதிராகவும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர் பி.எஸ். ராஜேஷ் கூறுகையில், ‘‘அமைச்சரவையில் இருந்தால்தான் அரசியல் நடவடிக் கைகளில் முக்கியத்துவம் என்பது மார்க்சிஸ்ட் கட்சியில் இல்லை. கட்சி பொறுப்பு அளிப்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான். அதனால்தான் ஷைலஜாவுக்கு சட்டப்பேரவையில் கட்சியின் கொறடா பொறுப்பு அளிக்கப் பட்டுள்ளது. முதல்வர் பினராயி விஜயனின் மருமகன் என்பதற்காக முகமது ரியாசுக்கு அமைச்சர பதவி வழங்கப்படவில்லை. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (டிஒய்எஃப்ஐ) தலைவராக இருக்கும் முகமது ரியாஸ் கட்சிக்காக பெரிதும் பங்களித்துள்ளார்’’ என்று தெரி வித்தார். - பிடிஐ