Last Updated : 19 May, 2021 03:12 AM

 

Published : 19 May 2021 03:12 AM
Last Updated : 19 May 2021 03:12 AM

கர்நாடகாவில் வேகமாக பரவி வரும் கருப்பு பூஞ்சை நோய்க்கு 14 பேர் உயிரிழப்பு: 179 பேருக்கு பாதிப்பு; 54 பேருக்கு பார்வைக் குறைபாடு

பெங்களூரு

பெங்களூருவில் கரோனா தொற்றுக்கு ஆளான‌ 179 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். 54 பேருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டிருக்கிறது.

இதுகுறித்து கர்நாடக சுகா தாரத் துறை அமைச்சர் சுதாகர் பெங்களூருவில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடகாவில் கரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையை கட்டுப் படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். கரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களில் சிலருக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் இருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த நோய் எதனால் பரவுகிறது, எவ்வாறு சிகிச்சை அளிப்பது என்பதை கண்டறிய மருத்துவ நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. நிபுணர் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் உரிய முன்னெச்சரிக்கை நட வடிக்கை எடுக்கப்படும்.

பெங்களூருவில் 179 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு 8 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ள 52 பேரிடம் பேசினேன். கருப்பு பூஞ்சை நோய் தாக்கப் பட்டதில் 54 பேருக்கு கண் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. 14 பேர் உயிரிழந்ததாக மருத்துவமனை களில் இருந்து பெறப்பட்ட தகவல் கள் மூலம் உறுதி செய்யப் பட்டுள்ளது.

தீவிர கரோனா தொற்று, ஆக்சி ஜன் குறைபாடு, அதிகளவில் ஸ்டீராய்டு, நீரிழிவு நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கும் கரோனா நோயாளிகளை இந்நோய் எளிதில் தாக்குகிறது. ஹெச்.ஐ.வி., புற்று நோய், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட வர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயா ளிக்கு 40 முதல் 60 ஆம்ப்போட்ரிசின் மருந்து தேவைப்படுகிறது. எனவே கர்நாடகாவுக்கு 20 ஆயிரம் குப்பி களை ஒதுக்குமாறு மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். இதுவரை 450 குப்பிகள் மட்டுமே வந்துள்ளன. இவ்வாறு சுதாகர் தெரிவித்தார்.

தீவிர கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் கடுமையான தலைவலி, கண்களில் வலி, கண்களில் வீக்கம், கண்கள் சிகப்பு நிறமாக மாறுதல், திடீ ரென்று பார்வை குறைதல், சைனஸ் பிரச்சினை, மூக்கில் வலி, வாய் உள் ளிட்ட சுற்றியுள்ள பகுதி கருப்பாக மாறுதல் போன்ற அறிகுறிகள் இருந் தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும். குறிப்பாக, கரோனா தொற்றில் இருந்து குணமடைந்த சர்க்கரை நோயாளிகள், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத் தக்கது.

குணப்படுத்தும் முயற்சியில் எய்ம்ஸ்

புதுடெல்லி: பூஞ்சை தொற்று காரணமாக கருப்பு பூஞ்சை அல்லது மியூகோர்மைகோசிஸ் நோய் ஏற்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழலில் உள்ள பூஞ்சை வித்துகள் மூலம் கருப்பூ பூஞ்சை மனிதர்களுக்கு பரவுகிறது. வெட்டு அல்லது தீக்காயங்கள் மூலம் தோலில் நுழையும் பூஞ்சை பின்னர் அது தோலின் மீது மேலும் பரவுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீப காலமாக கரோனா தொற்றாலிருந்து மீண்டு வருபவர்கள் அல்லது மீண்ட நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக கர்நாடகா, உத்தராகண்ட், தெலங்கானா, மத்திய பிரதேசம் மற்றும் பிஹார் மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

எனவே, சர்க்கரை நோய் உள்ளவர்களும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களும் இந்த கருப்பு பூஞ்சையிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது. இதனிடையே, கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்துவது தொடர்பான வழிமுறைகளை எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x