

அனைத்து மாநிலங்களுக்கும் பேரிடர் நிவாரண நிதியாக ரூ.23 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.
நாட்டில் புயல், வெள்ளம் போன்ற பேரி டர்களின்போது, மக்களின் வாழ்வா தாரத்துக்கும், சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளவும் மாநில பேரிடர் நிவாரண நிதியத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி வருகிறது. அதன்படி, கடந்த ஆண்டு மாநிலங்களுக்கு ரூ.29 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அந்தத் தொகையில் 50 சதவீதத்தை கரோனா தடுப்புப் பணிகளுக்கு செலவிட அனுமதி வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக 2021–22-ம் ஆண்டுக்கான மாநில பேரிடர் நிதிக்கு ரூ.23 ஆயிரம் கோடியை மத்திய அரசு நேற்று ஒதுக்கியது. கடந்த ஆண்டை போலவே, இந்தத் தொகையில் 50 சதவீதத்தை கரோனா தடுப்புப் பணிகளுக்கு செலவிட மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ஒதுக் கிய பணத்தை ஒடிசா மாநிலம் திறம்பட செல விட்டுள்ளது. அடிக்கடி புயலால் பாதிக்கப்படும் ஒடிசா மாநிலம், கடலோர பகுதிகளில் ‘புயல் பாதுகாப்பு மையங்களை’யும் உள்கட்டமைப்புகளையும் கட்டி முடித் துள்ளது. தற்போது கரோனா வைரஸ் பரவல் அதிகரித்த நிலையில், அந்த மையங்களை கரோனா சிகிச்சை முகாம்களாகவும் ஒடிசா அரசு மாற்றி உள்ளது.
பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதலாக ஆம்புலன்ஸ்கள், மருத்துவக் கருவிகள் வாங்க கர்நாடக மாநில அரசு கடந்த வாரம் ரூ.15 கோடியை ஒதுக்கியது.