Published : 26 Dec 2015 09:20 AM
Last Updated : 26 Dec 2015 09:20 AM

கட்சி விரோத நடவடிக்கைக்கான ஆதாரங்களை காட்ட முடியுமா?- பாஜக தலைமைக்கு கீர்த்தி ஆசாத் கேள்வி

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு எதிராக பேசியதாக பாஜக எம்பி கீர்த்தி ஆசாத் மீது கட்சித் தலைவர் அமித் ஷா நடவடிக்கை எடுத்துள்ளார். இந்நிலையில் கட்சி விரோத நட வடிக்கையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை காட்ட முடியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மீது பாஜக எம்பி கீர்த்தி ஆசாத் பரபரப்பு குற்றச் சாட்டுக்களை சுமத்தினார். இதை யடுத்து, கட்சியில் இருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை காட்ட முடியுமா என பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவுக்கு கேள்வி எழுப்பி கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் மற்றும் காரணங்களை எனக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்போதுதான் கட்சி எழுப்பும் கேள்விகளுக்கு திருப்திகரமான பதிலை என்னால் அளிக்க முடி யும். மேலும், இதுவரை கட்சிக்கு விரோதமாகவோ, விதிக ளுக்கு முரணாகவோ எந்தவொரு நடவடிக்கையிலும் நான் ஈடுபட்ட தில்லை. உண்மையான தொண் டனாகவே இருந்து வுருகிறேன். டெல்லி கிரிக்கெட் சங்கம் குறித்து பேசியதுதான் இடை நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் என்றும் தெரிவிக்கப்படவில்லை. எனவே உண்மையான காரணத்தை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x