இந்தியாவில் குறையும் கரோனா பாதிப்பு: 3.11 லட்சம் பேருக்குத் தொற்று: 4 ஆயிரத்தைக் கடந்த உயிரிழப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக கரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 3.11 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால், உயிரிழப்பு 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 11 ஆயிரத்து 170 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2 கோடியே 46 லட்சத்து 84 ஆயிரத்து 77 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 36 லட்சத்து 18 ஆயிரத்து 458 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தத் தொற்றில் 14.66 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கரோனாவிலிருந்து 2 கோடியே 7 லட்சத்து 95ஆயிரத்து 335 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 4 ஆயிரத்து 77 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2 லட்சத்து 70 ஆயிரத்து 284 ஆக அதிகரித்துள்ளது.

ஐசிஎம்ஆர் அறிவிப்பின்படி, இதுவரை 31 கோடியே 48 லட்சத்து 50 ஆயிரத்து 143 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 18லட்சத்து 32 ஆயிரத்து 950 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in