மிக அதி தீவிர புயல் ‘டவ்-தே’- போர்பந்தர் அருகே நாளை மறுதினம் கரையை கடக்கிறது

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

தீவிர புயல் டவ்-தே மிக அதி தீவிர புயலாக வலுவடைந்து வடக்கு, வடக்கு-மேற்கு திசையில் நகர்ந்து மே 18 மதியம் அல்லது மாலையில் குஜராத்தில் போர்பந்தர் மற்றும் நாலியாவுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்திய வானிலைத் துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் அளித்த தகவல்களின் படி, கிழக்கு மத்திய மற்றும் அருகில் உள்ள தெற்கு மத்திய அரபிக் கடலில் 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த தீவிர புயல் "டவ்-தே" கிழக்கு மத்திய மற்றும் அதன் அருகில் உள்ள தெற்கு மத்திய அரபிக்கடலில் மையம் கொண்டிருந்தது. பின்னர் அது வேகமாக நகர்ந்து வருகிறது.

தீவிர புயல் "டவ்-தே" மிக அதி தீவிர புயலாகவும் வலுவடைந்து வடக்கு,வடக்கு-மேற்கு திசையில் நகர்ந்து மே 18 மதியம் அல்லது மாலையில் குஜராத்தில் போர்பந்தர் மற்றும் நாலியாவுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அதிதீவிர புயலின் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள மலை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in