‘கருப்பு பூஞ்சை’ நோயை குணப்படுத்திக் கொள்ளலாம்: அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்

‘கருப்பு பூஞ்சை’ நோயை குணப்படுத்திக் கொள்ளலாம்: அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்
Updated on
1 min read

இந்தியாவில் 'மியுகோர் மைகோசிஸ்' எனப்படும் கருப்பு பூஞ்சைநோய் ஏற்படுவது அதிகரித்துள்ளது. இந்த நோய் தொற்றால்உயிரிழப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. மகாராஷ்டிரா வில் இதற்கு பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று கூறுகையில், ‘‘மியுகோர்மை கோசிஸ்' கருப்பு பூஞ்சை தொற்று, நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ள நபர்களை தாக்கும் கண்களை சுற்றி வலி அல்லது எரிச்சல், காய்ச்சல், தலைவலி, இருமல், மூச்சு விடுவதில் சிரமம், ரத்த வாந்தி ஆகியவை இந்நோய் தொற்றுக்கு முக்கிய அறிகுறிகளாகும். இவற்றை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று கருப்பு பூஞ்சை நோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் இதனை எளிதில் குணப்படுத்தி விடலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.-பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in