அமெரிக்காவில் இருந்து 29,514 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள்: மும்பை வந்து சேர்ந்தது

அமெரிக்காவில் இருந்து 29,514 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள்: மும்பை வந்து சேர்ந்தது
Updated on
1 min read

அமெரிக்காவில் இருந்து 29,514 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் விமானம் மூலம் இன்று மும்பை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்துள்ளன.

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். மக்களை நோய்த் தொற்றுக்கு ஆளாவதைத் தடுக்கும் பொருட்டு தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது.

கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு உதவுதற்காக சர்வதேச நாடுகள் 9,284 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 7,033 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 19 ஆக்சிஜன் உற்பத்திக் கருவிகள், 5,933 செயற்கை சுவாசக் கருவிகள் மற்றும் சுமார் 3.44 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் வழங்கியுள்ளன. தொடர்ந்து உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.


அந்த வகையில் அமெரிக்காவில் இருந்து 29,514 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் விமானம் மூலம் இன்று மும்பை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்துள்ளன. இதற்கு முன்னதாக அமெரிக்காவில் இருந்து கடந்த 5 -ம் தேதி 81,000 ரெம்டெசிவிர் மருந்துகளும், 8 ஆம் தேதி 25,600 ரெம்டெசிவிர் மருந்துகளும், 11 ஆம் 78,595 ரெம்டெசிவிர் மருந்துகளும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in