உயர் நீதிமன்ற நீதிபதிகள் 106 பேர், 2,768 நீதிமன்ற அதிகாரிகள் கரோனாவில் பாதிப்பு: தலைமை நீதிபதி ரமணா தகவல்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா | கோப்புப்படம்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா | கோப்புப்படம்
Updated on
1 min read

நாட்டை அச்சுறுத்திவரும் கரோனா 2-வதுஅலையில் இதுவரை உயர் நீதிமன்றங்களின் 106 நீதிபதிகள், நீதிமன்றங்களில் பணியாற்றும் 2,768 அதிகாரிகள் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர், உயர் நீதிமன்ற நீதிபதிகள் 3 பேர், 34 நீதிமன்ற அதிகாரிகள் கரோனாவில் உயிரிழந்துள்ளனர் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தின் சார்பில் காணொலி மூலம் வழக்குகளை விசாரிப்பதற்கான தனியான செயலி தொடக்க விழா நேற்று நடந்தது இதில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி. ரமணா பங்கேற்றார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்த கரோனா பெருந்தொற்று ஒவ்வொருவரையும் பாதிக்கிறது, வலியையும், வேதனையையும் தருகிறது. கடந்த 2020, ஏப்ரல் 27-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஒரு ஊழியர் கரோனாவில் பாதிக்கப்பட்டார் அதிலிருந்து தொடர்ந்து வருகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் 3 பேரையும், 34 நீதிமன்ற அதிகாரிகளையும் கரோனாவில் இழந்திருக்கிறோம்.

நாட்டை அச்சுறுத்திவரும் கரோனா 2-வதுஅலையில் இதுவரை உயர் நீதிமன்றங்களின் 106 நீதிபதிகள், நீதிமன்றங்களில் பணியாற்றும் 2,768 அதிகாரிகள்பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தேதிவரையில், உச்ச நீதிமன்றத்தில் பதிவாளர் துறையில் 800 ஊழியர்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர், கூடுதல் பதிவாளர்கள் 10 பேர் பல்வேறு கால கட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற விசாரணை முறையையே கரோனா பெருந்தொற்று மாற்றிவிட்டது. ஆனால், மாற்றத்துக்கு எப்போதும் தயாராக நீதிமன்றம் இருந்ததால், பெருந்தொற்று காலத்தில் சூழலுக்கு ஏற்ப எளிதாக மாற முடிந்தது. நாட்டில் நீதித்துறையும், நீதிபரிபாலனமும் தடங்கலின்றி செயல்பட நடவடிக்கை எடுத்தது.

இந்த பெருந்தொற்றால் ஒவ்வொருவரும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளோம் என்னுடைய சகோதரர், என் நீதிபதிகள் சகோதரிகள், பதிவாளர்கள், உச்ச நீதிமன்ற ஊழியர்கள், நீதிமன்ற ஊழயர்கள் என பாதிக்கப்பட்டுள்ளோம். உடல்ரீதியான பாதிப்பு மட்டுமின்றி மனதீரியான பாதிப்புகளும் ஏற்படுகிறது

கரோனா பெருந்தொற்று குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கெடுத்து விசாரித்து வருகிறது. வழக்கை விசாரித்து வரும் நீதிபதி சந்திரசூட்டும் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது வேதனையாக இருக்கிறது. மிகுந்த கவனத்துடன் இருந்தபோதிலும் அவர்கூட பாதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு ரமணா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in