Published : 13 May 2021 04:57 PM
Last Updated : 13 May 2021 04:57 PM

வீட்டு தனிமையில் உள்ள கோவிட் நோயாளிகளுக்கு எம்பிபிஎஸ் இறுதி ஆண்டு மாணவர்கள் மூலம் தொலை மருத்துவ சேவை 

வீட்டு தனிமையில் உள்ள கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க எம்பிபிஎஸ் இறுதி ஆண்டு மாணவர்களை பணியமர்த்துவது சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்த ஒரு சில மாநிலங்கள் முயற்சித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தேசிய தொலை மருத்துவ சேவையின் இ-சஞ்ஜீவனி தளத்தின் வாயிலாக சுமார் ஓராண்டு காலத்திற்குள், ஏறத்தாழ 50 லட்சம் நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், பொதுமுடக்கத்தின் காரணமாக மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தடைப்பட்டிருந்த காலகட்டத்தில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த முன்முயற்சியில் இணைந்து, தினமும் நாடு முழுவதும் சுமார் 40000 நோயாளிகளுக்கு நேரடி தொடர்பு இல்லாத, அபாயமற்ற மருத்துவ சேவையை வழங்கி வருகின்றன. இ-சஞ்ஜீவனி திட்டத்தில் 2 தொகுதிகள் உள்ளன:

இ-சஞ்ஜீவனி ஏபி-ஹெச்டபிள்யூசி: மருத்துவர்கள் இடையேயான இந்த தொலை மருத்துவத் தளம், இந்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள சுகாதார மற்றும் நல் வாழ்வு மையங்களில் செயல்படுத்தப்படுகிறது.‌ தற்போது இது 18,000க்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்களிலும் சுமார் 1500 முனையங்களிலும் அமல்படுத்தப்படுகிறது. 2022 டிசம்பர் மாதத்திற்குள் 1,55,000 சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்களுக்கு தொலை மருத்துவ சேவை விரிவுபடுத்தப்படும்.

இ-சஞ்ஜீவனி ஓபிடி: 28 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் வழங்கப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 30,00,000 நோயாளிகளுக்கு இலவச மருத்துவ சேவை வழங்கப்பட்டுள்ளது. மக்கள், வீடுகளிலிருந்து சிகிச்சை பெற இத்திட்டம் பயனுள்ளதாக அமைகிறது.

பெருந்தொற்றின் தொடக்கம் முதல், நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் இடையே தேசிய தொலை மருத்துவ சேவை, குறுகிய காலத்தில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

வீட்டு தனிமையில் உள்ள கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்த ஒரு சில மாநிலங்கள் முயற்சித்து வருகின்றன. எம்பிபிஎஸ் இறுதி ஆண்டு மாணவர்களை பணியமர்த்துவது பற்றியும் மாநிலங்கள் திட்டமிட்டு வருகின்றன. பெருந்தொற்றின் பாதிப்பு அதிகரிப்பதால் சில மாநிலங்களில் இ-சஞ்ஜீவனி ஓபிடி திட்டம் நாள் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.

இ-சஞ்ஜீவனி தொலை மருத்துவ சேவையில் 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு ஆலோசனைகளை வழங்கி தமிழ்நாடு முதல் மாநிலமாகத் திகழ்கிறது.

அதிக ஆலோசனைகளை வழங்கிய மாநிலங்களுள் கீழ்காணும் மாநிலங்கள் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளன:

தமிழ்நாடு (1044446), கர்நாடகா (936658), உத்தரப் பிரதேசம் (842643), ஆந்திரப் பிரதேசம் (835432), மத்தியப்பிரதேசம் (250135), குஜராத் (240422), பிஹார் (153957), கேரளா (127562), மகாராஷ்டிரா (127550) மற்றும் உத்தராகண்ட் (103126).

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x