Published : 13 May 2021 08:47 AM
Last Updated : 13 May 2021 08:47 AM

1,50,000 ஆக்சிகேர் கொள்முதல்: பிஎம் கேர்ஸ் ரூ. 322.5 கோடி நிதி ஒதுக்கீடு

புதுடெல்லி

ரூபாய் 322.5 கோடி மதிப்பில் 1,50,000 ஆக்சிகேர் அமைப்பு முறைகளைக் கொள்முதல் செய்ய பிரதம மந்திரியின் குடிமக்களுக்கான உதவி மற்றும் நிவாரணம் (பிஎம் கேர்ஸ்) அறக்கட்டளை நிதி ஒதுக்கியுள்ளது.

இது, எஸ்பிஓ2 (ரத்த பிராணவாயு செறிவூட்டல்) அளவுகளின் அடிப்படையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும். இது ஆக்சிஜனைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ உருவாக்கிய விரிவான அமைப்பு முறையாகும்.

இந்த அமைப்பு இரண்டு கட்டமைப்புகளில் உருவாக்கப்பட்டுள்ளது. அடிப்படைக் கட்டமைப்பில் 10 லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர், அழுத்த விசை ஒழுங்குபடுத்தும் மற்றும் ஆக்சிஜனின் போக்கைக் கட்டுப்படுத்தும் கருவி, ஈரப்பதமூட்டி, மூக்கில் பொருத்தப்படும் புனல் வகை உபகரணம் ஆகியவை இடம் பெறும். எஸ்பிஓ2 அளவீடுகளின் அடிப்படையில் ஆக்சிஜனின் போக்கு மனித சக்தியால் கட்டுப்படுத்தப்படுகிறது.
மற்றொரு திறன் வாய்ந்த கட்டமைப்பில் குறைந்த அழுத்த விசை ஒழுங்குபடுத்தும் கருவி, மின்னணு கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் எஸ்பிஓ2 நுண்ணாய்வு ஆகியவற்றின் வாயிலாக தானாகவே பிராணவாயுவை கட்டுப்படுத்தும் அமைப்பு முறைகளும் அடிப்படை கட்டமைப்பில் உள்ள அம்சங்களும் இடம்பெறும்.

எஸ்பிஓ2வை அடிப்படையாகக் கொண்ட பிராணவாயு கட்டுப்பாட்டு அமைப்பு முறை, நோயாளியின் எஸ்பிஓ2 அளவுகளின் அடிப்படையில் ஆக்சிஜன் வழங்கப்படுவதோடு ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு தூக்கிச் செல்லப்படும் வசதியுடையது. ஆக்சிஜன் சிலிண்டரின் அயர்வுத்திறனை அதிகரிக்கிறது. தொடக்க நிலையில் எஸ்பிஓ2- வின் அளவுகளை மருத்துவ பணியாளர் நிர்ணயிக்க இந்த அளவுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அமைப்பு முறையால் காட்சிப்படுத்தப்படுகிறது.

ஆக்சிஜனின் போக்கை அவ்வப்போது மருத்துவ பணியாளர்கள் சரி செய்ய வேண்டியதன் பணிச்சுமையை இந்த அமைப்பு முறை குறைப்பதுடன், இதன் வாயிலாக தொலை மருத்துவ வசதியும் வழங்கப்படுகிறது. குறைவான எஸ்பிஓ2 அளவுகள், இணைப்பில் பிரச்சனைகள் போன்ற பின்னடைவின் போது தானியங்கி முறையில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்படும். இந்த ஆக்சிகேர் கருவிகளை வீடுகளிலும், தனிமைப்படுத்தும் மையங்களிலும், கொவிட் சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளிலும் பயன்படுத்தலாம்.

கூடுதலாக, ஆக்சிகேர் முறையுடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஆக்சிஜன் சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் முகக் கவசங்களின் சிறந்த செயல்திறனால் ஆக்சிஜனின் பயன்பாடு 30-40% குறைகிறது.

இந்தியாவில் உள்ள பலதரப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு இந்தத் தொழில்நுட்பத்தை டிஆர்டிஓ உரிமை மாற்றம் செய்துள்ளதால் நாடு முழுவதும் ஆக்சிகேர் அமைப்புமுறையை இந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்யும்.

தீவிர மற்றும் அவசரகால கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் சிகிச்சையை தற்போதைய மருத்துவ நெறிமுறை பரிந்துரைக்கின்றது. ஆக்சிஜனின் உற்பத்தி, போக்குவரத்து மற்றும் சேமிப்பின் தற்போதைய நிலையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன.

தற்போதைய கோவிட் பெருந்தொற்று நிலையில், பெருமளவிலான நபர்களுக்கு பிராணவாயு சிகிச்சை தேவைப்படுவதால், அடிப்படை கட்டமைப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து உற்பத்தி ஆலைகளும் ஏற்கனவே தங்களது முழு கொள்ளளவில் இயங்குவதால் ஒரே ஒரு அமைப்பு முறையை மட்டுமே சார்ந்திருப்பது நடைமுறையில் சாத்தியமாகாமல் இருக்கலாம்.

எனவே தற்போதைய சூழலில் பலதரப்பட்ட அமைப்பு முறைகளைப் பயன்படுத்திக் கொள்வது ஏதுவாக இருக்கும். தற்போது நிலுவையில் உள்ள கார்பன் மாங்கனீஸ் எஃகு சிலிண்டர்களின் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் திறன் குறைந்த அளவாகவே இருப்பதால் மாற்று முயற்சியாக, சாதாரண ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு பதில் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய இலகுவான சிலிண்டர்களை டிஆர்டிஓ பரிந்துரைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x