கரோனா தடுப்பூசி உற்பத்தி டெல்லி, ஆந்திர முதல்வர்களின் புகாரால் மனம் நொறுங்கியது: பாரத் பயோடெக் நிர்வாக இயக்குநர் குமுறல்

கரோனா தடுப்பூசி உற்பத்தி டெல்லி, ஆந்திர முதல்வர்களின் புகாரால் மனம் நொறுங்கியது: பாரத் பயோடெக் நிர்வாக இயக்குநர் குமுறல்
Updated on
1 min read

கரோனா தடுப்பூசிகளான கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு உற்பத்தியை பிற மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி முதல்வர்அர்விந்த் கேஜ்ரிவால், ஆந்திர

முதல்வர் ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

கோவாக்ஸின் உற்பத்தியில் தொடர்ந்து கடினமாக பாடுபட்டு வரும் தங்கள் நிறுவனம் குறித்துபிரதமரிடம் புகார் அளித்திருப்பதை அறிந்தபோது நெஞ்சே சிதறுண்டு போனது என்று பாரத்பயோடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுசித்ரா எல்லா தெரிவித்துள்ளார்.

தங்கள் நிறுவனம் தொடர்பாகசில மாநிலங்கள் புகார் அளித்திருப்பது மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்ட சுசித்ரா, குறைவான பணியாளர்கள் மற்றும் முழு நேர ஊரடங்கு போன்ற சிக்கலான சவால்களை எதிர்கொண்டு தொடர்ந்து மருந்துஉற்பத்தி செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். கோவாக்ஸின் தடுப்பூசி மருந்துகள் ஆந்திரா, டெல்லி உள்பட 18 மாநிலங்களுக்கு நேரடியாக அனுப்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

தங்கள் நிறுவன பணியாளர்களில் 50-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு விடுமுறையில் உள்ளனர். இருப்பினும் குறைவான பணியாளர்களுடன் 24 மணி நேரமும் மருந்து உற்பத்தி செய்யப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in