துன்பத்தை ஏற்றுக் கொள்வதுதான் மகிழ்ச்சி: இன்ஸ்டாகிராமில் ஓவியத்தை வெளியிட்டு நடிகர் ஷாகித் கபூர் கருத்து

நடிகர் ஷாகித் கபூர் வெளியிட்டுள்ள ஓவியம்.
நடிகர் ஷாகித் கபூர் வெளியிட்டுள்ள ஓவியம்.
Updated on
1 min read

துன்பத்தை ஏற்றுக்கொள்வதுதான் மகிழ்ச்சி என்று மகிழ்ச்சி என்ற ஓவியத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் கருத்து தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் பிரபல நடிகராக இருப்பவர் ஷாகித் கபூர். இவரது மனைவி மீரா கபூர். இவர்களுக்கு மிஷா, செயின் என 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அண்மையில் தனது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ஒரு ஓவியத்தின் படத்தை ஷாகித் கபூர் வெளியிட்டுள்ளார்.

அந்த ஓவியத்தில் ஒரு உடைந்த கட்டிலில் ஒரு குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியான முகத்துடன் தூங்கிக் கொண்டிருக்கின்றனர். இருண்ட அறையில், கூரை ஒழுகும்நிலையிலும், மோசமான ஏழ்மையிலும் அவர்களது முகத்தில் மகிழ்ச்சிதிளைக்கிறது. சமூக வலைத்தளத்தில் இந்தப் பதிவுக்கு மகிழ்ச்சியின் புகைப்படம் என ஷாகித் கபூர் பெயரிட்டுள்ளார்.

இந்த ஓவியத்தை துருக்கியைச் சேர்ந்த நஸீம் ஹிக்மத் என்ற பிரபல ஓவியர் வரைந்துள்ளார். மேலும் இந்தப் படத்தைப் பதிவு செய்து மகிழ்ச்சி என்பது துன்பங்கள் இல்லாமல் இருப்பது அல்ல. அதைஏற்றுக்கொள்வது ஆகும். சிந்தனையைத் தூண்டுகிறது இந்த ஓவியம் என்று ஷாகித் கபூர் கூறியுள்ளார். அவர் இதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பின்னர் அவரைப் பின்தொடர்பவர்கள் பலர் இந்தப் படத்தை ஷேர் செய்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in