

காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் சோபூரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சோபூர் நகரின் டார்சூ நகரில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.
தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இரவு நேரத்தில் துப்பாக்கிச் சண்டை நிறுத்தப்பட்டது.
இன்று காலை மீண்டும் துப்பாக்கிச் சண்டை துவங்கியது. அப்போது, தீவிரவாதிகளில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், சில தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்படலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்க்