

தடுப்பூசி தயாரிப்பாளர்களே தடுப்பூசிக்கு விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும் தயாரிக்கப்படும் தடுப்பூசியில் 50 சதவீதத்தை மத்திய அரசுக்கும் மீதமுள்ள 50 சதவீதத்தை மாநில அரசுகளுக்கும் பொதுச் சந்தை விற்பனைக்கும் வழங்கலாம் என்றும் மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது.
அதைத் தொடர்ந்து பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசிக்கான விலையை மாநில அரசுகளுக்கு ரூ.600 என்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,200 என்றும் நிர்ண யித்தது. பாரத் பயோடெக் நிறுவனம்மத்திய அரசுக்கு நிர்ணயித்திருக்கும் விலையை விட மாநில அரசுகளுக்கு மூன்று மடங்கு விலை நிர்ணயித்தது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 29-ம் தேதி பாரத் பயோடெக் நிறுவனம் மாநிலங்களுக்கான விலையை ரூ.400 ஆக குறைத்தது.
இந்நிலையில், மே 1-ம் தேதி முதல் ஆந்திரப் பிரேதசம், அசாம்,சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், காஷ்மீர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 14 மாநிலங்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை நேரடியாக அனுப்பி வருகிறது.