

ஒரு ஆண்டுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்தும் தனக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக வங்கதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான தஸ்லிமா நஸ்ரின் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே வீட்டிலேயே தனியாகத்தான் இருந்தேன். என் வளர்ப்புப் பூனைதான் எனக்கு துணை. நான் வெளியில் எங்கும் செல்லவில்லை. யாரையும் வீட்டுக்குள் விடவில்லை. சமைத்தல், வீட்டை சுத்தம் செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டேன். ஒரு ஆண்டுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்தும் எனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. ஒரு ஆண்டாக வீட்டிலேயே இருந்தும் எனக்கு எப்படி கரோனா தொற்று ஏற்பட்டது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.