Published : 11 May 2021 03:11 AM
Last Updated : 11 May 2021 03:11 AM

வெளிநாடுகளில் இருந்து 3 போர் கப்பல்களில் வந்த கரோனா மருத்துவ சாதனங்கள்

கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை நாட்டில் கட்டுக்கடங்காமல் பரவிவரும் வேளையில் அதன் சிகிச்சைக்காக பல்வேறு நாடுகளும் உதவி வருகின்றன. அந்த வகையில் பெருமளவு மருத்துவ சாதனங்களுடன் கடற்படையின் 3 கப்பல்கள் நேற்று இந்தியா வந்தன.

சிங்கப்பூரில் இருந்து 8 கிரையோஜெனிக் ஆக்சிஜன் டேங்கு களுடன் ஐராவத் போர்க் கப்பல் விசாகப்பட்டினம் வந்துள்ளது. இதுபோல் கத்தார் மற்றும் குவைத்தில் இருந்து 40 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன், 400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் 47 ஆக்சிஜன் செறிவூட்டிகளுடன் ஐஎன்ஐ கொல்கத்தா போர்க் கப்பல் மங்களூரு வந்தது.

மேலும் கத்தாரில் இருந்து 40 டன் திரவ ஆக்சிஜன் ஐஎன்எஸ் திரிகண்ட் கப்பல் மும்பை வந்து சேர்ந்தது.

இது தொடர்பாக இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறும்போது, “கடற்படையின் 3 கப்பல்கள் மூலம் 800 டன் திரவ ஆக்சிஜன், 20 கிரையோஜெனிக் ஆக்சிஜன் டேங்குகள், 3,150 சிலிண்டர்கள், ஆக்சிஜன் நிரப்பப்பட்ட 900 சிலிண்டர்கள், கரோனா விரைவு பரிசோதனைக்கான 10 ஆயிரம் சாதனங்கள், 450 பாதுகாப்பு கவச உடைகள்உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் இந்தியா வந்துள்ளன” என்றார்.

கடந்த ஆண்டு கரோனா முதல் அலையின்போது, சமுத்திரசேது திட்டத்தின் கீழ் மாலத்தீவு இலங்கை, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுமார் 4 ஆயிரம்இந்தியர்களை இந்திய கடற்படைதாயகம் அழைத்து வந்தது. தற் போது, சமுத்திர சேது திட்டத்தின் 2-ம் கட்டமாக பல்வேறு நாடுகளில் இருந்து மருத்துவ சாதனங்களை இந்தியாக கொண்டு வருகிறது.

கடந்த வாரம் பாரசீக வளைகுடா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து திரவ மருத்துவ ஆக்சிஜன் மற்றும் பிற அத்தியாவசிய மருத்துவ சாதனங்களை கொண்டுவரும் பணியில் 9 போர்க் கப்பல்களை இந்திய கடற்படை ஈடுபடுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x