Published : 11 May 2021 03:11 AM
Last Updated : 11 May 2021 03:11 AM

20 நாட்களில் 18 பேர் உயிரிழப்பு; அலிகர் முஸ்லிம் பல்கலை.யில் புது வைரஸா?- ஐசிஎம்ஆர், சிஎஸ்ஐஆர் ஆய்வகங்கள் ஆய்வு

புதுடெல்லி

உ.பி.யில் 100 ஆண்டுகள் பழமையான அலிகர் பல்கலைக் கழகத்தில் ஜவகர்லால் நேரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் உள்ளது. இதில் கரோனா உள்ளிட்டபல்வேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் என 18 பேர் கடந்த 20 நாட்களில் உயிரிழந்தனர்.

கடந்த மார்ச் இறுதியில் 2 நாட்களில் அலிகர் பல்கலைக்கழகத் தின் 10 பேராசிரியர்கள் கரோனாவால் உயிரிழந்தனர். அலிகரில்இருந்து வெளியூர் சென்றவர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் பலர் அலிகர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுபவர்கள். அலிகரை சுற்றியுள்ளபகுதி மக்களில் பலரும் உயிரிழந்துள்ளனர்.

கரோனாவின் முதல் பரவலின்போது இந்த பல்கலைக்கழகத்தில் ஒருவர் கூட இறக்கவில்லை. தற்போது உயிரிழப்பு அதிகரித்துள்ளதால், அலிகர்வாசிகள் பதற்றம்அடைந்துள்ளனர். இதையடுத்து,அலிகரில் பல்கலைக்கழகம்அமைந்துள்ள சிவில் லைன் பகுதியில் புது வகை வைரஸ் பரவுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதை தீர்க்க அலிகரில்கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் மாதிரிகளை மத்திய அரசின் ஐசிஎம்ஆர் மற்றும் சிஎஸ்ஐஆர் ஆகிய ஆய்வகங்களுக்கு அனுப்பி உள்ளனர்.இதன் தலைமை நிர்வாகிகளுக்குஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத் தின் துணைவேந்தர் டாக்டர் தாரீக் மன்சூர் கடிதமும் எழுதியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x