

நாட்டின் 29-வது மாநிலமாக திங்கள்கிழமை உதயமான தெலங்கானாவின் முதல் முதல்வராக தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் கே.சந்திரசேகர ராவ் பதவி ஏற்றார். இவருடன் 11 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்திலிருந்து ஹைதராபாத் உள்பட ரங்காரெட்டி, மேதக், வாரங்கல், கம்மம், மஹபூப் நகர், நலகொண்டா, கரீம் நகர், ஆதிலாபாத் மற்றும் நிஜாமாபாத் ஆகிய 10 மாவட்டங்களை தனியாகப் பிரித்து தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. இது அதிகாரபூர்வமாக திங்கள் கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்தது. ஆனாலும், தெலங்கானா மற்றும் சீமாந்திரா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த 10 ஆண்டுகள் வரை ஹைதராபாத் பொது தலைநகராக செயல்படும்.
இந்நிலையில், தெலங்கானா வில் ஆட்சியைக் கைப்பற்றிய தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி, மாநிலம் உதயமான நாளிலேயே ஆட்சி அமைத்தது. இக்கட்சியின் தலைவர் கே.சந்திரசேகர ராவ், திங்கள்கிழமை காலை 8.15 மணிக்கு முதல்வராக பதவி ஏற்றார்.
இவருக்கு தெலங்கானா மாநில ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவருடன் சந்திரசேகர ராவின் மகன் கே.ராமா ராவ், மருமகன் ஹரீஷ் ராவ் மற்றும் நாயனி நரசிம்மா ரெட்டி, ஈடல ராஜேந்தர், பத்மா ராவ், முகமது அலி, ராஜய்யா, ஜகதீஷ்வர் ரெட்டி, ஜோகு ராமண்ணா, போச்சாரம் சீனிவாச ரெட்டி, பட்டினம் மஹேந்தர் ரெட்டி ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
கம்மம், மஹபூப் நகர் மாவட்டங்களைத் தவிர்த்து அனைத்து மாவட்டங்களுக்கும் தலா ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மேலும் 6 அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக அக்கட்சி வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
நரசிம்மன் பதவி பிரமாணம்
இதுவரை ஒருங்கிணைந்த ஆந்திர மாநில ஆளுநராக பதவி வகித்து வந்த இ.எஸ்.எல். நரசிம்மன், மாநிலம் இரண்டாக பிரிந்ததால், தெலங்கானாவின் முதல் ஆளுநராகவும் திங்கள் கிழமை காலை 6.30 மணியளவில் ராஜ்பவனில் பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கல்யாண் ஜோதி சென்குப்தா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஆளுநர் நரசிம்மன், தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் ஆகியோரின் பதவி ஏற்பு விழாவில் கட்சி எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள், முக்கியப் பிரமுகர்கள் பங்கேற் றனர். முன்னதாக, சந்திரசேகர ராவ், தெலங்கானா மாநிலத்திற்காக உயிர் தியாகம் செய்தோரின் நினைவுத் தூணுக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தெலங்கானா முதல்வராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர் கே.சந்திரசேகர ராவ். ஹைதராபாதில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் ஹைதராபாதில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் கே.சந்திரசேகர ராவ், காவல் துறை தலைவர் அனுராக் சர்மா மற்றும்