Last Updated : 14 Dec, 2015 09:43 AM

 

Published : 14 Dec 2015 09:43 AM
Last Updated : 14 Dec 2015 09:43 AM

நேஷனல் ஹெரால்டு வழக்கு பொய்யாக ஜோடிக்கப்பட்டுள்ளது: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அப்பட்டமான பொய் என்று அந்த கட்சி தெரிவித்துள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராவதற்கு விலக்கு கேட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுலுக்கு நெருக்கடி முற்றியிருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக நேஷனல் ஹெரால்டு வழக்கை மத்திய அரசு துாசி தட்டி நடத்தி வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. மேலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இது தொடர்பாக அந்த கட்சி பிரச்சினை எழுப்பி வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் மீதான குற்றச்சாட்டு கள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் ஜோடிக்கப்பட்டவை என்றும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறும்போது, ‘‘நேஷனல் ஹெரால்டு சொத்துக்களை லாப நோக்கமற்ற ‘யங் இந்தியா’ நிறுவனத்துக்கு மாற்றியதில் எந்த தவறும் நிகழவில்லை. இதன் மூலம் தனியார் நிறுவனத்துக்கு ஒரு ரூபாய் கூட செல்லவிடாமல் தடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் சோனியா, ராகுல் இருவருமே எந்த லாபமும் அடையவில்லை. இதனால் இவ்வழக்கில் அவர்கள் கவலை அடைய தேவையில்லை. தனிப்பட்ட நபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மூடப்பட்ட ஒரு வழக்கை மோடி அரசு மீண்டும் துாசி தட்டி எடுத்திருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும்’’ என்றார்.

மற்றொரு காங்கிரஸ் தலை வரான அஸ்வனி குமார் வெளி யிட்ட அறிக்கையில் ‘‘காங்கிரஸ் தலைவர்கள் மீதான குற்றச்சாட்டு களில் எந்த உண்மையும் இல்லை. சொத்து பரிமாற்றம் சட்ட ரீதியா கவே நடந்துள்ளது. மேலும் கடந்த 7-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், இவ்வழக்கில் கிரிமினல் குற்றச் சாட்டுகள் புதைந்திருப்பதற்கான கேள்வியே எழவில்லை என்றும் மேலும் வழக்கு தொடருவதற்கான முகாந்திரமே இல்லை என்றும் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இந்த விவரங்கள் தீர்ப்பின் 36வது பத்தியில் இடம்பெற்றுள்ளது’’ என சுட்டிக்காட்டியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x