

மகாத்மா காந்தி கைப்பட எழுதிய குறிப்புகளையும் பண்டைய கால மேற்கு வங்காள போர் வாளையும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் பரிசாக வழங்கினார்.
வருடாந்திர இருதரப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக ரஷ்யாவில் உள்ளார். இந்தப் பயணத்தின்போது ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அந்நாட்டு அதிபர் விளாடிமர் புடினை பிரதமர் மோடி சந்தித்தார்.
அப்போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு மகாத்மா காந்தி கைப்பட எழுதிய குறிப்புகள் அடங்கிய புத்தகத்தையும் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த மேற்கு வங்க மன்னர் பயன்படுத்திய வாள் ஒன்றையும் பரிசாக அளித்தார்.
பரிசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக இதனை பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.