Last Updated : 09 May, 2021 07:28 AM

 

Published : 09 May 2021 07:28 AM
Last Updated : 09 May 2021 07:28 AM

கரோனாவிலிருந்து தப்பிக்க பசுவின் கோமியம் குடியுங்கள்: உ.பி. பாஜக எம்எல்ஏவின் பரிந்துரையால் சர்ச்சை

பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங் | படம் ஏஎன்ஐ

பாலியா

கரோனா வைரஸ் பரவல் தொற்றிலிருந்து தப்பிக்க பசு கோமியத்தை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றியில் குடிக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் கூறியிருப்பதும், அதுதொடர்பாக அவர் வீடியோ வெளியிட்டிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் கரோனா வைரஸால் நாள்தோறும் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர், ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். உலக நாடுகளில் கரோனா பரவலைத் தடுக்க பல்ேவறு தடுப்பூசிகளுக்கும் உலக சுகாதார அமைப்பு அங்கீகாரமும், அனுமதியும் அளித்துள்ளது.

தண்ணீரில் கோமியத்தை கலந்த சுரேந்தர் சிங்

ஆனால், உ.பி.யில் உள்ள பாலியா மாவட்டம் பெய்ரியா தொகுதி எம்எல்ஏவான சுரேந்திர சிங் , வித்தியாசமாக பசுவின் கோமியத்தை தண்ணீரில் கலந்து குடித்தால் கரோனாவிலிருந்து தப்பிக்க முடியும் எனக் கூறியிருப்பது அறிவியலை முட்டாளாக்குவது போல் இருக்கிறது.

இது தொடர்பாக எம்எல்ஏ சுரேந்திர சிங் வெளியிட்ட வீடியோவில், ஒரு டம்ளரில் தண்ணீர் வைத்துக்கொண்டு, அதில் பசுவின் கோமியத்தை கலந்து, குடிக்கும் வகையில் வீடியோவில் விளக்கம் அளித்துள்ளார்.

பசுவின் கோமியம் கலந்த நீரை குடித்த சுரேந்திர் சிங் (படம்-உதவி வீடியோ)

சுரேந்திர சிங் அந்த வீடியோவில் கூறுகையில் “ பசுவின் கோமியத்தை தண்ணீரில் கலந்து காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அடுத்த அரை மணிநேரத்துக்கு ஏதும் சாப்பிடக்கூடாது. இவ்வாறு குடித்தால் கரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.

தன்னுடைய ஆரோக்கியமான உடல்நிலைக்கும் இதுதான் காரணம், மக்களுக்காக 18 மணிநேரம் தன்னால் உழைக்க முடிகிறது. எந்த விதமானநோய்க்கும் பசுவின் கோமியம் மருந்தாகும், குறிப்பாக இதய நோய்களுக்கு பசுவின் கோமியம் சிறப்பாக வேலை செய்யும்” எனத் தெரிவித்துள்ளார்.

பசுவின் கோமியத்தை கலக்கும் காட்சி

கடந்த ஆண்டு கரோனா முதல் அலை ஏற்பட்டிருந்தபோது, ஜூலை மாதத்தில், மே.வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ், கரோனா வைரஸிலிருந்து தப்பிக்க பசுவின் கோமியத்தை குடிக்க வேண்டும். இது கடவுள் கிருஷ்ணரின் பூமி, பசு கடவுளுக்கு இணையானது, நாம்அதை வணங்குகிறோம். பசுவின் கோமியம் குடித்தால் ஆரோக்கியமாக வாழ முடியும்” எனத் தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x