Published : 09 May 2021 03:15 AM
Last Updated : 09 May 2021 03:15 AM

ஆந்திர சுண்ணாம்பு கல்குவாரியில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்து 9 தொழிலாளர்கள் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், கலசபாடு மண்டலம், மாமிள்ளபள்ளி எனும் கிராமத்தில் சுண்ணாம்புக் கல்குவாரி செயல் படுகிறது. நேற்று காலை வழக்கம் போல் கூலி தொழி லாளர்கள் பணிக்கு சென்றனர். அப்போது சிலர், ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க வைக்க மாற்று இடத்திற்கு கொண்டு சென்றனர்.

அப்போது அந்த அடர்ந்த வனப்பகுதியில் திடீரென பயங்கர சத்தத்துடன் ஜெலட்டின் குச்சிகள் வெடித்து சிதறின. தகவல்அறிந்து கடப்பா போலீஸார் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்தனர். அங்கு தொழிலாளர்களின் உடல் பாகங்கள் சிதறிகிடந்தன. இதனால் தொழிலாளர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. உறவினர்கள், நண்பர்கள் அடையாளம் காட்டியதில் 9 சடலங்களின் விவரம் மட்டும் தெரிய வந்துள்ளது.

முதற்கட்ட விசாரணை

மற்ற சடலங்களின் அங்கங் களை சேகரிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். சட்டவிரோதமாக ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்களை கொண்டு வந்து கல்குவாரிக்கு பயன்படுத்தி இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந் துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x