Published : 08 May 2021 03:13 AM
Last Updated : 08 May 2021 03:13 AM

அடுத்த 3 நாட்களில் மாநிலங்களுக்கு 10 லட்சம் கரோனா தடுப்பூசி விநியோகம்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல்

அடுத்த 3 நாட்களில் மாநில அரசுகளுக்கு 10 லட்சம் கரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு சார்பில் மாநில அரசுகளுக்கு இதுவரை 17.35 கோடி தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இதில் இதுவரை 16.44 கோடி தடுப்பூசி கள் பயனாளிகளுக்கு செலுத்தப் பட்டிருக்கிறது. மாநில அரசுகளிடம் 90 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. அடுத்த 3 நாட்களில் மாநிலங்களுக்கு 10.25 லட்சம் தடுப்பூசி அனுப்பி வைக்கப்படும்.

தமிழகத்தில்...

தமிழகத்துக்கு இதுவரை 72.03 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன. இதில் 65.90 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 6.13 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

புதுச்சேரிக்கு 3.97 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 2.11 லட்சம் பயனாளிகளுக்கு போடப்பட்டிருக்கிறது. 1.85 லட்சம் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன.

ஆந்திராவுக்கு 72.96 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன. இதுவரை 70.70 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 2.26 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. கர்நாடகாவுக்கு 1.06 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 1.02 கோடி தடுப்பூசி கள் போடப்பட்டிருக்கிறது.

கேரளாவுக்கு 78.97 லட்சம் தடுப்பூசிகள் விநியோகம் செய்யப் பட்டுள்ளன. அங்கு 76.95 லட்சம் தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது.

உத்தர பிரதேசத்துக்கு 1.45 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 1.36 கோடி தடுப்பூசி கள் செலுத்தப்பட்டிருக்கிறது. 9.63 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

ராஜஸ்தான் 1.42 கோடி தடுப்பூசிகளை பெற்றுள்ளது. மாநில அரசு தடுப்பூசிகளை முழுமையாக பயன்படுத்தி யுள்ளது. அங்கு 11,654 தடுப்பூசிகள் மட்டுமே இருப்பில் உள்ளன.

மகாராஷ்டிராவுக்கு 1.75 கோடிதடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த மாநில அரசு 1.70கோடி தடுப்பூசிகளை பயன்படுத்தியுள்ளது. 4.84 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் இருக்கிறது.

குஜராத் அரசு இதுவரை 1.39 கோடி தடுப்பூசிகளை பெற்றுள்ளது. இதில் 1.33 கோடி தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது. 5.76 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

மத்திய பிரதேசத்துக்கு 92.79 லட்சம் தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. அங்கு 87 லட்சம்தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 5.79 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

ஹரியாணா முதலிடம்

ஹரியாணாவுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளில் 6.54 சதவீதம் வீணாக்கப்பட்டுள்ளது. அசாமில் 6.04%, ராஜஸ்தானில் 5.56%, பிஹாரில் 5.13%, பஞ்சாபில் 4.98%, தாத்ரா நகரில் 4.97%, மேகாலயாவில் 4.83%, மணிப்பூரில் 4.18%, தமிழகத்தில் 3.98 சதவீதம் அளவுக்கு தடுப்பூசிகள் வீணாகியுள்ளன என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x