மே.வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை- ஆளுநருடன் உள்துறை அமைச்சக குழு சந்திப்பு

மே.வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை- ஆளுநருடன் உள்துறை அமைச்சக குழு சந்திப்பு
Updated on
1 min read

மேற்குவங்க தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் 3-வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. அதன்பின், பல இடங்களில் ஏற்பட்ட வன்முறையில் 16 பேர் உயிரிழந்தனர். திரிணமூல் ஆதரவு குண்டர்களால் தங்கள் கட்சித் தொண்டர்கள் பலர் கொல்லப்பட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் வன்முறைக்கான காரணங்களை ஆராய, உள்துறை அமைச்சக கூடுதல் செயலாளர் தலைமையில் 4 உறுப்பினர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு அனுப்பியது. நேற்று முன்தினம் கொல்கத்தா வந்த இக்குழு, தலைமைச் செயலாளர், மாநில உள்துறை செயலாளர் மற்றும் காவல் துறை இயக்குநரை சந்தித்தது. வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத் தினரை சந்தித்து பேசியது.

இந்நிலையில் இக்குழுவினர் நேற்று ஆளுநர் மாளிகையில் மாநில ஆளுநர் ஜகதீப் தன்கரை சந்தித்துப் பேசினர். அப்போது, மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து, குறிப்பாக மே 2-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஏற்பட்ட வன்முறைகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு ஆளுநரிடம் கோரினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in