

பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாநோயாளிகளுக்கு 470 டன்மருத்துவ ஆக்சிஜன் தரப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் இதுதினமும் 550 டன்னாக அதிகரிக்கும். எனவே மேற்கு வங்க மாநிலத்துக்கு தினந்தோறும் 550 டன் ஆக்சிஜனை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
எதிர்பார்த்த அளவை விட குறைந்த அளவில் மருத்துவ ஆக்சிஜன் மேற்கு வங்கத்துக்கு விநியோகம் செய்யப்பட்டால் அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துவது மட்டுமல்லாது பல உயிர்களையும் பலிவாங்கிவிடும் அபாயம் உள்ளது.
தினந்தோறும் மேற்கு வங்கத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனிலிருந்து 360 டன் வரை வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. ஆனால் மேற்கு வங்கத்துக்கு தரப்படும் ஆக்சிஜன், 308 டன் மட்டுமே. ஆனால் மேற்கு வங்க மாநிலத்தின் தேவையோ 550 மெட்ரிக் டன்னாக உள்ளது. எனவே உடனடியாக 550 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் விநியோகத்தை மத்திய அரசு செய்யவேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.