

காற்றில் உள்ள நைட்ரஜனை கொண்டு ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு நேரடியாக அது வழங்கும் பொருட்டு மருத்துவமனைகளில் 100 மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை எண்ணெய் மற்றும் எரிவாயு பொதுத்துறை நிறுவனங்கள் நிறுவுகின்றன.
இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் இயங்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு பொதுத்துறை நிறுவனங்கள், நாட்டின் திரவ மருத்துவ ஆக்சிஜன் தேவைகளை பூர்த்தி செய்ய தேவை மிகுந்த இந்த காலகட்டத்தில் முனைப்புடன் பணியாற்றி வருகின்றன.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதானின் வழிகாட்டுதலோடு, சுமார் 100 பிஎஸ்ஏ மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை நாடு முழுவதும் உள்ள பொது சுகாதார மையங்களில அவை நிறுவி வருகின்றன.
உத்திரப் பிரதேசம், பிஹார், கர்நாடகா, கோவா, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், ஒடிசா, மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் இத்திட்டத்தின் கீழ் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியின் கீழ் இதற்கான மொத்த செலவும் செய்யப்படும்.
200 முதல் 500 படுக்கைகள் வரை உள்ள மருத்துவமனைகளில் வெவ்வேறு உற்பத்தித் திறனுடன் கூடிய ஆலைகள் நிறுவப்பட்டு வருகின்றன. இவற்றுக்கான தொழில்நுட்பத்தை டிஆர்டிஓ மற்றும் சிஎஸ்ஐஆர் வழங்கியுள்ளன.
காற்றில் உள்ள நைட்ரஜனை கொண்டு ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு நேரடியாக அது வழங்கப்படும்.
ஆக்சிஜன் உற்பத்தி மையங்களுக்கான ஆர்டர்கள் இந்திய நிறுவனங்களிடம் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் சில இந்த மாதத்தில் இருந்தே செயல்படத் தொடங்கும். ஜூலைக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும்.