Published : 07 May 2021 03:12 am

Updated : 07 May 2021 04:28 am

 

Published : 07 May 2021 03:12 AM
Last Updated : 07 May 2021 04:28 AM

தேசத்தில் நிலவும் தடுப்பூசி அரசியல்

vaccine-politics

குர்சரண்தாஸ்

பயங்கரமான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை தேசத்தில் பெரும் நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது நாட்டு மக்களை ஒருங்கிணைத்துள்ளது என்று நினைக்கலாம். ஆனால் இந்தியா நம்பிக்கையற்ற முறையில் பிளவுபட்டுள்ளது. நமது மக்களுக்கு தடுப்பூசி போடும் பிரச்சினையானது, அரசியல் கால்பந்தின் பொருளாக மாறியுள்ளது. இங்கே ஒரு புறம் டெல்லியில் ஆம் ஆத்மி அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவமனைக்கு உதவியற்ற நிலையில் துடித்து வருகிறது. ஆக்சிஜன், வென்டிலேட்டர் இல்லாமல் தவித்து வரும் வேளையில், நமது அரசியல் கட்சிகள் பழங்குடியினரைப் போல நடந்து கொள்கின்றன. தேர்தல்கள்தான் நமது இறுதிப் போர்க்களம் என நினைத்து அவை போராடி வருகின்றன.

இந்த வெறுப்பு யுகத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் ஆறுதலாக ஒரு பொதுவான வார்த்தையைக் கூட தெரிவிக்க அவர்கள் மறுக்கின்றனர்.ஒரு ஆர்வத்தைத் தூண்டும் அரசியல் நாடகம் 2 வாரங்களுக்கு முன்பு டெல்லியில் நான்கு செயல்களின் மூலம் வெளிப்பட்டது. அதன்பின்னணியில் கரோனா விவகாரம் இருந்தது.


5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு அரசியல் கட்சிகள் மும்முரமாக இருந்தன. அதே நேரத்தில் கும்பமேளா நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மேலும் கரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை யாரும் கடைப்பிடிக்கவில்லை. இதற்கிடையில், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரும் ஏற்றுமதியாளருமான இந்தியா கரோனா தடுப்பூசியின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொண்டது என்பதை திடீரென உணர்ந்தது.

(1) தடுப்பூசியை உற்பத்தியை செய்யும் நிறுவனங்களுக்கு ஆர்டர்களை முன்னதாகவே வழங்க மத்திய அரசு மறந்துவிட்டது; (2) உலகின்இரண்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்தியாவில் கரோனாவை தடுப்பதற்கு போதுமான உற்பத்தித் திறனை உருவாக்க தடுப்பூசி தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் குறைந்த விலையை வழங்குதல்; (3) தடுப்பூசி போடும் திட்டத்தில் தனியார் மருத்துவமனைகள், அரசு சாரா அமைப்புகள் (என்ஜிஓ), மிகப்பெரிய தனியார் நிறுவனங்களை பயன்படுத்துதல்.

பழைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள மத்திய அரசு மறந்துவிட்டது. கரோனா பிரச்சினை ஏற்பட்ட முதல் மாதத்தில், கரோனா தொற்று பரிசோதனையை மாநிலங்களில் உள்ள அரசு ஆய்வகங்கள்தான் நடத்த வேண்டும் என்று கட்டுப்பாடுகளை விதித்தது. கரோனா தொற்று அதிகரித்து நிலையில், அரசு ஆய்வகங்களால் கூடுதல் பரிசோதனைகளை கையாள முடியவில்லை. தவறை உணர்ந்த அரசு கரோனா தொற்று பரிசோதனையை தனியார் ஆய்வகங்களுக்கும் தாராளமயமாக்கியது.

அப்போது கற்றுக் கொள்ளப்பட்ட பாடங்கள், தடுப்பூசி போடும் திட்டத்தில் மறக்கப்பட்டன. தொடக்கத்திலேயே மாநில அரசுகள், தனியார் மருத்துவமனைகள், குடியிருப்பு சங்கங்கள், நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகளை நம்பி இதுபோன்ற மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை அமல்படுத்தியிருக்கலாம்.

இந்த நாடகத்தின் முதல் செயலானது ஏப்ரல் 18-ம் தேதி நடந்தது. அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதினார்.அதில் இந்திய சோதனைகளை வலியுறுத்தாமல் வெளிநாடுகளில் தயாரான நம்பகத்தன்மையுள்ள தடுப்பூசிகளை இறக்குமதி செய்யஅனுமதிக்கலாம்; யாருக்கு தடுப்பூசி போடுவது என்பதை தீர்மானிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கலாம் என்று பரிந்துரைத்திருந்தார்.

இதில் 2-வது செயலானது, மன்மோகன் சிங்கின் அர்த்தமுள்ள கடிதம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனிடமிருந்து ஒரு அசாதாரணமான கோபத்தைத் தூண்டிவிட்டது ஆகும். காங்கிரஸ் ஆட்சி செய்யும் சில மாநிலங்களில் தடுப்பூசிக்கு எதிராக பொதுமக்கள் பொறுப்பற்ற தயக்கத்தை உருவாக்குவதன் மூலம் இரண்டாவது கரோனா அலைக்கு காங்கிரஸ் பங்களிப்பு செய்து வருவதாக அமைச்சர் ஹர்ஷ் வர்தன் குற்றம்சாட்டினார்.

இந்த நாடகத்தில் 3-வது செயலானது ஏப்ரல்19-ம் தேதி மத்திய அரசின் வெளியிட்டநாடகத்தனமான அறிவிப்புதான். தடுப்பூசி போடும் திட்டத்தில் முக்கிய மாற்றம் இருப்பதாக அரசு அறிவித்தது. தொற்று நோய்களின் இடைவிடாத எழுச்சியைக் கருத்தில் கொண்டு, அரசு அதன் தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்தியது. இது தனியார் துறைக்கு தனது நிலைப்பாட்டை தாராளமயமாக்கியது. பாதி தடுப்பூசிகளை சந்தை விலையில் விற்க அனுமதித்தது.

நாடகத்தின் 4-வது செயலானது, தடுப்பூசி தயாரிப்பாளர்கள் இந்தத் திட்டத்துக்கு உடனடியாக மதிப்பு கொடுத்து பதில் கொடுத்ததாகும். மேலும் இந்திய மக்கள் தொகைக்கு தடுப்பூசி போடுவதற்கான நேரத்தை வியத்தகு முறையில் அவர்கள் குறைத்தனர். ஆனால் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி கிடையாது என்ற கொள்கையை ராகுலும் சோனியாவும் எதிர்த்தனர்.

5-வதாக மேற்கு வங்க தேர்தலில் வெற்றி பெற கரோனா 2-வது அலையை உருவாக்கியதாக பிரதமர் மோடி மீது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியபோது இந்த நாடகத்தின் திரை முடிவுக்கு வந்தது. இந்த நாடகத்திலிருந்து என்ன மாதிரியான பாடங்களை நாம் பெற்றோம்?. மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அமைதியாக பேசும்,விரும்பத்தக்க மனிதர் ஆவார். மன்மோகன் சிங்குக்கு அவர் கூறிய கிண்டலான பதில் அரசியலில் ஒரு ஆழமான நோயை சுட்டிக்காட்டியது.

இன்று, எதிரிகளிடையே இத்தகைய கோபம், வெறுப்பு உள்ளது. இது ஒரு முறையற்ற போராக கருதப்படுகிறது. மேற்கு வங்கத் தேர்தல் அழிவுக்கான போர் என்று நீங்கள் நம்பினால் மட்டுமே மம்தாவின் வினோதமான கருத்து அர்த்தமுள்ளதாக இருக்கும். சமீப காலம் வரை, அரசியல்வாதிகள் தேர்தல் தோல்விகளை நிரந்தரமானது என்று நினைக்கவில்லை; தோல்வியுற்றவர் அடுத்த தேர்தலில் களமிறங்கி வாக்காளர்களைச் சந்தித்து வந்தார்.

2-வது பாடம்: இந்தியாவின் அரசியல்வாதிகள் குடியரசை பிளவுபடுத்தியிருக்கலாம். ஆனால்,அவர்கள் அரசின் திறனைப் பற்றிய அதிகப்படியான நம்பிக்கையில் ஒற்றுமையாக உள்ளனர். அவர்கள் தனியார் குடிமக்கள், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மீதுஅவநம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்கள்சமுதாயத்தையும் சந்தையையும் நம்பியிருந்தால், ஆரம்ப சோதனை மற்றும் கரோனா தடுப்பூசி உத்திகள் இன்னும் விவேகமானதாக இருந்திருக்கும். அதற்கு பதிலாக அவர்கள் அதிகாரத்துவத்தையும், அதிகாரிகளையும் நம்பினர்.

தடுப்பூசி திட்டத்துக்கு காங்கிரஸின் பதில், நிச்சயமாக, அதன் அறியாமை, தனியார் துறை மீதான அவமதிப்பே தான் காரணம்.

3-வது பாடம்: இந்தியாவில் கரோனா வைரஸ் பிரச்சினை இப்போது விலகாது என்று நம்புபவர்கள் கடந்த வாரம் தடுப்பூசி கொள்கை விவகாரத்தில் நடந்த விவாதத்துக்கு சாட்சியாக இருக்க வேண்டும். இந்த கேள்வியை காங்கிரஸ் மட்டும் எழுப்பவில்லை. பொருளாதார நிபுணர்கள், கொள்கை உருவாக்குபவர்கள் உள்ளிட்ட பலர் விமர்சனங்களை முன்வைத்தனர். இவை சுதந்திரமற்ற நாட்டின் அறிகுறிகள் அல்ல.

4-வது பாடம்: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனின் துரதிருஷ்டவசமான பதிலும் தற்காப்புடன் இருந்தது. இறுதி முடிவு என்பது பரஸ்பர மரியாதை இல்லாததால் வரையறுக்கப்பட்ட தவறாகும். அவமதிப்பை ஒழிப்பது என்பது தோல்வியுற்ற திருமணத்தை காப்பாற்ற முயற்சிப்பது போன்றதாகும். ஆனால் தேசம் ஆபத்தில்இருக்கும்போது, தேசத்தின் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். உண்மையில், அவர்கள் இந்த கரோனா தொற்று காலத்தில் வெறுப்பு யுகத்தில் துன்பப்படுகிறார்கள்.தடுப்பூசி அரசியல்தேசத்தில் நிலவும் தடுப்பூசி அரசியல்Vaccine politics

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x